தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:05‏


 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மனித மரபணு புலம்பெயர்வு பாதை[வழித்தடம்]
M168
ஆஃப்ரிக்கா 
இனம்
50,000வருடங்களு
க்குமுன் 
நீடித்த வரட்சி காரணமாக ஹோமோசேப்பியன்ஸ் ஆஃப்ரிக்காவை விட்டுவெளியேறல்[புலம்பெயர்தல்]
M130(M168-M130)
கடற்கரையோரஅடையாளம் 
காட்டி
50,000
வருடங்களு
க்கு முன்
அரேபியாவிற்குள் நுழைதல்,கடற்கரையோரமக்கள்  கரையோரம் இடம் பெயர்தல்.அவர்கள்விரைவாக ஆஸ்திரேலியாவை அடைதல்.இதற்குஆஸ்திரேலியாவின்  பூர்வீகக்குடிகள்[ஆதிவாசிகள்]  சான்றுகூறுகின்றனர்.அந்தமான் பழங்குடிகள் இந்த இடபெயர்ச்சியின்  எச்சமிச்சம்களேஇன்று இந்த அடையாளம் காட்டி ஆக இந்தியாவின்குடித்தொகையில் 5% மட்டுமே.அவையும் தென்இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே.
M89
மெசோபொட்
டாமியன்அடையாளம் காட்டி
45,000
வருடங்களு
க்கு முன்
M89 மக்கள் மெசோபொட்டாமியாவில் ,இருநதிகள் உள்ள நிலத்தில்,போதுமான தண்ணீர்வசதியுடனும் உண்பதற்கு போதுமான காட்டுகால்நடைகளுடனும் வேட்டையாடி சீவிக்கும்ஒரு நிலைகொண்ட வாழ்வு அமைத்து மகிழ்ந்துஇருந்தார்கள்

M9 
துரேனியஇனக் குழு
40,000 வருட
ங்களுக்கு 
முன்
M9 மக்கள் மெசோபொட்டாமியாவில் இருந்துவெளி வந்து துரேனிய ஆற்றுப்பள்ளத் தாக்குபகுதியில் இந்த கால கட்டத்தில்குடியேறினார்கள்
M20
(M168-M9-M20)
தொடக்கநாட்டுப்புறவாழ்க்கைவாழும்[கால்நடைவளர்ப்பில்வாழும்]  திராவிடஇனக்குழு
30,000 
வருடங்களு
க்கு முன்
திராவிடர்கள் இந்தியாவிற்குள்நுழைதல்.தொடக்க திராவிடர்கள்வேடுவர்களாகவும் கால்நடைவளர்ப்பவர்களாகவும் இருந்தனர்.தென்இந்தியரில் 50% வீதத்தினர்  மாறுதலடைந்துபுது  உயிரினமாக தோன்றியவர்களே.இந்தமாற்றம்[மாறுபாடு] M9 மக்கள் தொகையில்இருந்து  தோன்றியது 
M17
(M168-M9-M173-M17)
இந்தோஐரோப்பியன்

இனக்குழு

10,000  வருடங்க
ளுக்குமுன்
தென்  ரஷ்யாவிலும் உக்ரைனிலும் தோன்றியஇந்தோ ஐரோப்பியன் இனக்குழு துருக்கியின்அனடோலியன் மக்களுடன்[Anatolians ]  பண்பாட்டு கலப்பின் மூலமே விவசாயத்தைஅறிந்தது.இவர்கள் குதிரையை வீட்டுச்சூழலுக்கு பழக்கி எடுத்தார்கள்.ஆரியகொள்கையின் கதாநாயகர்கள் இவர்களே

 ஹோமோசப்பியன்ஸ்[Homo sapiens] என்று சொல்லப்படுகின்ற நவீனமனிதர்கள் ஆஃப்ரிக்காவில் தோன்றி கடந்த 60,000-70,000 ஆண்டுகளாகதொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர்இவர்கள் M168 எனப்படும்மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர்.இவர்களின் இடப் பெயர்தலின் முதல் கட்டமாக கிழக்கு ஆப்ரிக்காவில்இருந்து நீக்ரோய்ட் இனக் குழு ஆதி மனிதர்கள் செங்கடல்அரேபிய குடாநாடுகள்பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக -இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்கின்றனர்இந்த பரம்பலின் மூலம் M130என்ற புதிய மரபுயிரியல் குறியீடு இம்மககளிடையேஉருவாகின்றது.இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்துஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல்குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் என்று கூறிக்கப்படும்மனிதர்கள் தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர்.பல ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ஏறத்தாழ3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும்நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்காலஇந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர்.இவர்களிடம்  M17 எனும் மரபுயிரியல்குறியீடு காணப்படுகிறது.இவர்களே இந்தோ –ஆரிய இனக்குழு மக்கள்ஆவார்.

அதாவது இந்தியாவின் குடியேறிய முதலாவதுமனிதர்கள் மரபணுக் குறியீடு M130 உடையவர்கள்என நம்பப்படுகிறது.அவர்கள் கரையோரமாகஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள்.அவர்களின் மரபினர்[வழித்தோன்றல்இன்னும்அந்தமான் தீவுகளிலும் தமிழ் நாட்டிலும்இருக்கிறார்கள்.உதாரணமாக இம் மனிதர்களின்இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின்நீலகிரி மலைச்சாரலிலும்இலங்கையில் வாழும்வேடர்களும் ஆவர்.அதே போல M20 உடையவர்களும் திராவிட மொழியும்இன்னும் இந்தியாவில் உள்ளது.இவர்கள் 30,000 வருடங்களுக்கு முன்வந்தவர்கள்.அது போல ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின்பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் M17  உடையவர்களும் அங்கு இருக்கிறார்கள்.இவர்கள் 4000 வருடங்கள்அளவில் அல்லது அதற்கு பின் வந்தவர்கள்.
 பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி
நிகழ்ச்சியான[நேஷனல் ஜீயோகிராபிக்தொலைகாட்சியின்/National Geographic channel] "மனித இனத்தின் பயணம்"  என்றதொடரில்,அதன் தயாரிப்பாளர் "ஸ்பென்சர்வேல்ஸ்"[Spencer Wells],ஆஃப்ரிக்காவில்இருந்து வெளியேமுற்காலத்திய மனிதனின்முதலாவது இடப் பெயர்வு 60000 வருடங்களுக்குமுன்பு கிழக்கு கரையோரமாக,குறிப்பாக தமிழ்நாடு வழியாக நடை பெற்றது என்கிறது.உள்ளூர்மக்களின் மரபணு இதற்கு சாட்சியாக உள்ளதுமதுரை காமராசர்பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின் 
தலைமையில் ஆய்வு செய்த மரபியல்அறிவியல் விஞ்ஞானிகள்,50000வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட"எம்130 டி.என்.யையும் 30000வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட"எம்20 டி.என்.யையும் கள்ளர் சமுதாயம்உட்பட,இன்றைய தமிழ் நாட்டின் உள்ளூர்மக்களிடம் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.இதை ஒத்த மரபணுஆஃப்ரிக்கா மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் [Australian aborigines] பாதிக்கு மேற்பட் டோருக்கும்பிலிப்பைன்ஸ் மற்றும்மலேசியா போன்ற நாடுகளிலும் "எம்130 டி.என்.இருப்பதாகடாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.மேலும் குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனிதஇனம் ஆஃப்ரிக்காஆஸ்திரேலியஇந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான்"எம்130 டி.என்.மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது எனஊகிக்கவும்  இடம் உண்டு. 

1 comment:

  1. மரபணுக்கள் பற்றிய அறிமுகம் விளக்கம் தெளிவாக உள்ளது. அருமை. 130 டி. என். ஏ யும் 20 டி. என். ஏ. பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete