
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
எமது மூதாதையர்
குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் ,முதல் பரிணாமவளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும்,அதாவது குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர்.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே”
மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியைதொல்காப்பியர் மேலே கூறியவாறு 3000-2500 ஆண்டுகளுக்கு முன்சொல்லி சென்றார்[தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்:27-33].அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப்பகுத்து "மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே" என மேலும் உயிர்களின்தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளைஅப்போதே கூறியுள்ளார் அவர் கூற்றில் சில சில பிழைகள்உண்டு.உதாரணமாக தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்குஅறிவுகள் உண்டென்று கூறியது,[தேனீக்கு மூக்கு இல்லை/Bees,...