இலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகவும் பொருளாதாரப் பலத்தைத் தேடிக்கொள்வதற்காகவும் புதியதோர் அரசியல் கலாச்சாரம் அங்கு தோன்றி நின்று தாண்டவம் ஆடுகின்றது என்று நாம் முன்னர் பலதடவைகள் இந்தப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். பொதுத் தேர்தல் மட்டுமல்ல, நடைபெற்ற உள்ராட்சித் தேர்தல்களின் மூலமும் இதே அரசியல் அதிகாரத்தையும் மேலும் பலத்தையும் தேடிக்கொள்வதில் தான் அரசியல்வாதிகள் மீண்டும் அக்கறையாக செயற்பட்டார்கள். அத்துடன் ஆட்சியதிகாரம் இருந்தால் அரசாங்க வளங்களைகொள்ளை அடிக்கலாம் என்ற துரோகத்தனமான தீர்மானத்தோடுதான் வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றதை நாம் நேரில் கண்டோம்.
அதற்கு மேலாக, ஏற்கெனவே அரசாங்கத்தின் கஜானாவை கொள்ளை அடித்து சுவை கண்ட அணியினர் அதற்காகக் காத்திருப்பதையும் நாம் அவர்களது வார்த்தைகள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
இப்போது அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு பூராகவும் அரசியல் திருவிளையாடல்கள் அரங்கேறியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும் என ஒரு தரப்பு கங்கணம் கட்டிநிற்கிறது. ஆட்சியைப் பிடித்தே ஆவோம் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தரப்பின் நிலைப்பாடு. இவை ஒரு புறமிருக்க, மகிந்த ராஜபக்சாவின் கை ஓங்குவது அவ்வளவு நல்லதல்ல என்ற நிலைப்பாட்டில் அமெரிக்காவும் இந்தியாவும் மிகவும் கவனமாக இருக்கின்றன. இந்த நாடுகளின் போக்கு தனக்கு உலைவைத்துவிடுமோ என்ற ஏக்கம் மகிந்த ராஜ பக்சாவை உலுக்கவே செய்கிறது.
இவை ஒருபுறமிருக்க, வடக்கு கிழக்கில் நீதியையும் உண்மையையும் புறந்தள்ளிவிட்டு சலுகைகளுக்காகவும் அதிகார பலத்திற்காகவும் விட்டுக்கொடுப்புக்களை செய்ய முன்வந்தவண்ணம் உள்ளார் அரசியல் “போக்கிரிகள்”.வடக்குகிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக கடும் பிரயத்தனங்கள் நடந்துகொள் கின்றன.
சுருங்கக்கூறின் ஆடு,கீரை, புலி என்ற கதை போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது யார் என்ற இழுபறிகள் உடனடியாகத் தீரப் போவதில்லை.
இதல் வேடிக்கைஎன்னவெனில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனக்குள் வைத்துக் கொண்டு காய்நகர்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்ட நினைத்தார். நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கதைக்கமாட்டேன் என்று தந்திதொலைக் காட்சிக்கு செவ்விவழங்கியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.இன்றுபிரதமர் பதவியில் இருந்துரணில் விலகவேண்டும் என்றுகோசம் எழுப்புமளவில் அவரின் அரசியல் எதிர்காலம் அமைந்துள்ளது.
அதேசமயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந் தாவுக்குஅமைச்சுப் பதவிவழங்கக்கூடாது எனத் தடுத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். டக்ளஸ் தேவானந்தாஅமைச்சராகினால், அவருக்கான வாக்குவங்கி அதிகரித்துவிடும் என்றபயத்திலேயே டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு.ஆனால் இப்போது புதிய அமைச்சரவை அமைக்கும் பட்சத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டால், அதனைத் தாம் எதிர்க்கமாட்டோம் என்றும்,அதற்குப் பரிகாரமாக வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் தமது ஆட்சிஅமைவதற்கு டக்ளஸ் தேவானந்தா மானசீகமாக ஆதரவு தரவேண்டும் என்பது போன்ற பண்டமாற்றுப் பேச்சுக்கள் நடப்பதான தகவல்களும் உண்டு.இதேவேளை வடக்கு மாகாணசபையைக் குழப்பிய இளம் உறுப்பினர்கள் இப்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதான செய்திகளும் வந்த வண்ணமுள்ளன.
இது மட்டுமல்ல, இன்னும் துரோகத்தனமான செயற்பாடுகள் அதிகளவில் எங்கள் காதுகளுக்கு வந்துசேரும். பாவம்!
மக்கள்,ஒன்றுமில்லாதவரகளாகவும்,ஒரு சுகத்தையும் அனுபவிக்காதவர்களாக இருந்துவிட்டு, இயற்கையாகவோ அன்றுகாக்கி உடைக்காரர்களின் சன்னங்களினாலோ ஒருநாள் இறந்துபோவார்கள். ஆனால் தமிழ் பேசும் தலைமைகளுக்கு துப்பாக்கி ஏந்திய சிங்களச் சிப்பாய்கள் காவலும் ஏவலும் செய்துகொண்டே இருப்பார்கள். இதுநிச்சயம்.!
:நன்றி:உதயன்
No comments:
Post a Comment