மனிதம் இருப்பது மானிடனுக்கு அழகு
மனிதம் இருப்பது மனிதனுக்கு பேரமைதி
அன்பு இருப்பது உணர்வின் அழகு
மனிதம் இழந்த மானிடன்
தன்னை இழக்கிறான்
வற்றாத பாசம் உண்டாக்கி
வாஞ்சையுடன் பண
தேடலையே உருவாக்கி
உலக ஆசையில் மூழ்கி
பிறரை நேசிக்கும் பக்குவம் மறந்தே
இரசிப்புத்தன்மையை இழந்து
ஏற்புத்திறன் குன்றி
மனிதம் மறந்து போனால்
மானிட வாழ்வில்
உடைந்த மனங்கள்
நிலையாக வாழ்வது எப்படி??
கருணை இன்றிப்போவதும் ஏனோ?
மானிட சிந்திக்க மறுப்பதும் ஏனோ ?
ஓயவில்லை உன் பண ஆசையென்றால்
மனதில் உள்ளொளி உண்டாவது எப்படியோ ?
ஒளிமயமான சமூகம் உண்டாக்க
ஒன்றுபட்டு வலம் வருவோம் வாரீர்
மானிடா மனிதம் உன்னிடத்தில் இருக்கிறது
இதயம் திறந்தே அதை நீ வெளிப்படுத்திடு
ஏழைகளின் வாழ்வு வளம்பெற நீ
துணையாகி நின்று விடு
மனிதம் மறந்து போகாது நிலைத்திட வேண்டும்
-காலையடி,அகிலன்.
No comments:
Post a Comment