உண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது?

ஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக  மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
இவ்வாசகம்  மனிதர்களுக்கு மட்டுமல்ல ,விலங்குகள் பறவைகளுக்கு கூடப் பொதுவானதாகவே கருதலாம் .
ஏனெனினில் அவைகளும் கூட்டமாகவே வாழ்கின்றன.
காகங்கள் கூட தன்  இனத்தில் ஒன்று இறந்துவிட் டால் அவை கூடி  அழுவதனை  நேரடியாகக் அவதானித்திருக்கிறோம். வீட்டில் வளர்க்கப்படும் நாய்,ஆடு.மாடுகள்கூட  வீட்டில் வாழும் மனிதருக்குக்  கவலையான நிகழ்வுகள் நடந்துவிட்டால் கண்ணீர் வடிப்பதனை கவனித்திருக்கிறோம்.
ஆனால் மனித இனத்தினைப்போன்று இரண்டுகாலில் நடந்தும் , மனிதரோடு மனிதராக மனிதத்தோல் போர்த்துக்கொண்டும்  தம்மையும் மனிதர்கள் எனக் எண்ணிக்கொண்டு திரியும்  மனிதத்தினை தொலைத்த ஆசாமி உயிரினங்களும்  நம்மத்தியில் இல்லாமலில்லை.
வாழ்வில் ஒருவன் நொந்துவிட்டால் , விழுந்தவனை மாடேறி உழக்குவது என்பது இந்த ஆசாமி வர்க்கத்தில்தான் காணமுடிகிறது. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வழக்கத்தினையும் இந்த ஆசாமி வர்க்கத்தில்தான் காண முடிகிறது. வேண்டாப்  பெண்டிர்  கைப்பட்டால் குற்றம் கால் பட் டால் குற்றம் என்பதுவும் இந்த வர்க்கத்தில்தான் காணமுடிகிறது. இவர்களுக்கும்அன்பு,பண்பு ,பாசம் போன்ற நல்லுணர்வுகளுக்கும் எந்தவித தொடர்புகளே  இல்லை எனலாம்.
ஆமாம். உண்மையான மனிதம் நிறைந்த மனிதர்களே , உண்மையான அன்பினைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உறவில் காயங்களுக்கு இடமில்லை. வெறுப்புக்கு வழியில்லை. உறவுகளின் துன்பம் கண்டு கண்ணீர் விடுவர் .அதனை வள்ளுவனும்,


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்.  

எனக் கூறுகிறார். அதாவது,
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். 
இவ்வகையான அன்பு மூலமே உண்மையான உறவு உணரப்படுகிறது.
ஆக்கம் : செல்லத்துரை , மனுவேந்தன் 










No comments:

Post a Comment