திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, காங்கேசந்துறை வீதியைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில் இந்துக் கல்லூரி இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரி இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
இது ஒரு கலவன் பாடசாலையாகும்.
பெயர்க்காரணம்
கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.
மேலும் கொக்குவில் பற்றி இன்றயநிலை அறிய கீழே உள்ள காணொளியினை அழுத்தவும்.
நன்றி:IBC
0 comments:
Post a Comment