அன்பு மழலைகள்
ஆனந்த சிரிப்பால் உறவுகளை மதி மயக்கி
அதிகாரம் பண்ணும் ரோஜா கூட்டம்
தாய்மையின் அழகுக்கு பொலிவு சேர்த்து
அவளின் இதயத்தை ஒளிர்விக்கும்
உயிர் மெய் மழலையின் ஒலி
மொட்டுகள் இதழ்களை விரித்து
வசியம் செய்வது போல
குழந்தைகளும்
புன்னகை இதழ்களை விரித்து
அன்பு உள்ளங்களை வசப்படுத்தி
தொட்டு பார்க்க வைக்கும்
மலர் தோட்டங்கள்
அன்னையின் மடியிலே ஆர்ப்பரித்து
சிந்தும் சிரிப்பு சிதறல்கள்
புது வித சுகமாய் பார்ப்போரை
கவர்ந்து இழுக்கும் காந்தங்கள்
இறைவனின் அதிசய படைப்பில்
இன்றும் குழந்தைகளின் பண்பு
இறந்து போகாமல்
உயிர் வாழ்ந்து வருவதால்
கவலை கொண்ட மனங்களில் இருந்து
துன்பம் வெளியேறி
சிந்தனையை குளிர வைக்கின்றன!
[காலையடி,அகிலன்]
No comments:
Post a Comment