அரசியல் என்னும்
உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின்
உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து
பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும்
சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை
முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.
நாம் இங்கு
தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, , ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும்
சாதாரண தமிழ் மக்கள், அதுவும்
தொழிலாளர்கள், விவசாயிகள்
மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள்
ஆகியோரையே நாம் அப்பாவித் தமிழர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது இங்கு
கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து
கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே
இந்தியாவில்
குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையில்
குறிப்பாக வடக்கு கிழக்கிலும் எமது தமிழ் மக்கள், நாம் மேலேசொல்லிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து
பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும்
சுகபோகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள்
என்பதையும் பொய்யான செய்திகளையும் வாக்குறுதிகளையும் தந்தவண்ணம் உள்ளார்கள் என்பதை
உணர்கின்ற பொழுது, இதைப் பற்றிய
கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பக்கத்தில் தொடர்ந்தும் பதிவுகளைத் தரவேண்டும்
என்ற எண்ணமே இவ்வாரக் கதிரோட்டம்.
முன்னெரெலலாம்,
இலங்கையில் உள்ராட்சி மன்றங்களுக்கு அங்கத்தவர்களாக
தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அந்த கிராமத்திற்கோ அன்றி நகரத்திற்கோ
சேவையாற்றுவதற்கு என்றே தங்கள் பதவிகளில் அமர்கின்றார்கள். ஆனால் தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் சாதாரண உள்ராட்சி
மன்றங்களின் “ஆட்சியை பிடிக்கின்றோம்” என்ற உணர்ச்சியூட்டும் சொற்பதங்களைப்
பாவித்து, சாதாரண
அங்கத்தவர்களின் மனங்களில் நீங்களும் “ராஜாக்களே” என்ற எண்ணத்தை தவறான வழியில்
பரப்பி வருகின்றார்கள்.
இந்த ஏமாற்று
நடவடிக்கைகளில அதிகளவில் ஈடுபட்டு வருவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்பதைக்
காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு “ஆட்சியைப் பிடிப்பதற்கு” அவர்கள்
மேற்கொள்ளும் தந்திரங்களை பார்த்து, மக்கள் அங்கு தங்களுக்குள் நகைத்துக் கொள்ளும் காட்சிகளாக இருப்பதை
அரசியல்வாதிகள் அறியாதவர்களாக உள்ளார்களா என்பதே எமது கேள்வி!
தமிழ்நாட்டில்
மாநிலக் கட்சிகளாக உள்ள அதிமுக மற்றும் திமுக ஆகியன மேற்கொள்ளும் நகைப்பிற்கிடமாக
உள்ள சம்பவங்கள் அங்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றவர்களாகவே உள்ளார்கள் என்பதை நன்கு
காட்டுகின்றுத. ஐபிஎல் என்னும் கிறிக்கெட் ஆட்டத்தில் ஓரு அணியின் உரிமையாளராக,
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்pன் புதல்வர் உதயநிதி மைதானத்திற்கு உள்ளே
சென்று ஆட்டத்தை கண்டு களித்து தனது வீரர்களை உற்சாகப்படுத்த, வெளியே அவர் தந்தை ஐபிஎல் ஆட்டத்தை
பகிஸ்கரிக்கின்றோம் என்று தரையிலஅமர்ந்த வண்ணம் தனது காடையர் கூட்டத்தின்
பாதுகாப்போடு தனது ஏமாற்று வேலையை செய்கின்றார்.
இவற்றைபார்க்கும்
போது தமிழ் நாட்டில் அரசியல் செல்வாக்கையும் சினிமாவில் சம்பாதிக்கும் பண
பலத்தையும் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம் செயற்பட,
நமது இலங்கையில் இலங்கை அரசு அமர்த்தியுள்ள
சிங்கள ஆயுதப்படையினரையும் பொலிஸ்காரர்களையும் கொண்டே தமக்கு எதிராக கேள்விகளைத்
தொடுக்கும் தமிழர்களை எச்சரிக்கும் தலைவர்களையும் ஒரே மேடையில் காண்புத போன்ற
விரக்தி உணர்வோடு எமது தமிழர்கள் தங்கள் காலத்தை வீணடிக்கின்றனர் என்பதையே இங்கு
சுட்டிக்காட்டுகின்றோம்.
-நன்றி உதயன்
No comments:
Post a Comment