01………………………….
ஒருவன்: என்
மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க
மற்றவன்: அவ்வளவு
அழகான குரலா?
ஒருவன்: இல்லை.
இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்.
02………………………..
ஒருத்தி: என்
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி...
மற்றவள்: அவ்வளவு
அழகா?
ஒருத்தி: இல்ல.
அவங்க சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பாங்க.
03……………………………..
ஒருவன்: மாட்டுக்கு
பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில்
இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
04……………………………..
ஒருவன்: மாட்டை
பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு
கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
05…………………………….
ஒருவன்: நேத்து
புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா
இருந்தது...!
06…………………………..
ஒருவன்: என்ன
வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு...?
மற்றவன்: ஏட்டு
ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
07…………………………
வந்தவர்: டாக்டர்
நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்:
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்:இல்லை
டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்:அப்படி
சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
08………………………….
வந்தவர்: டாக்டர்
இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்:எவ்வளவு
காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்:சரியாகச்
சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.
டாக்டர்:இல்லை.
உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே
நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது
தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின்
கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
09…………………………..
ஒருவன்: என் மனைவி
பொறுமையில் எல்லை மீற மாட்டாள்
மற்றவன்: எப்படி?
ஒருவன்: எத்தனையோ நாள்
என்னை அடிச்சிருக்காள்... ஒரு நாள் கூட அடித்துக் காயமேற்படுத்தினதில்லை...
வீக்கம் மட்டுதான் இருக்கும்.
10………………………………………
ஒருத்தி: முன்னால
என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு
வந்துக்கிட்டிருந்தார்...
மற்றவள்:
இப்போ...?
ஒருத்தி: ஒரு
டைப்பிஸ்ட் பொண்ணைக்
கொண்டு வந்திருக்கிறார்.
0 comments:
Post a Comment