முட்டாள் தினம் யாருக்காக?

அப்படி ஒரு கேள்வி எனக்குள் எழுந்ததும் ஊரில் இருக்கும் சண்டியன் சரவணையுடன் கைபேசியில் தொடர்புகொண்டேன்.

நான்:வணக்கம்,அண்ணை!

சரவணை : வணக்கம், பிள்ளை.,என்ன கனகாலத்திற்குப் பிறகு? ஏதன் தேவையெண்டா தானே எடுப்பாய்!

நான்: ஏன் அண்ணை  அப்பிடிச் சொல்லுறியள். உங்களிட்டை ப்பேசினாத்தானே விசயங்களை அறியலாம்.

சரவணை: அப்ப  விசயத்தோட தான் எடுத்திருக்கிறாய். சரி விசயத்துக்கு வாவன்.

நான்: அண்ணை ,  முட்டாள் தினம் வருக்குதெல்லோ!

சரவணை: முட் டாளுகளுக்கு ஒரு தினம்,அதிலை  என்ன?

நான்: அப்ப நாங்களெல்லாம் முட்டாளுகளா?

சரவணை;  பிள்ளை , ஆத்திரப் படுற மாதிரித் தெரியுது. இங்க பார் .
மனுசனா பிறந்தவங்களெல்லாம் எங்கோ,எதிலியோ தவறு செய்துவிடுகிறான். தெரியாமல் செய்பவன் இனி அந்த தவறினை நினைந்து வருந்துகிறான். தெரிந்து செய் பவன் செய்துகொண்டே இருக்கிறான். அவன் திருந்த  இடமில்லை.

நான்: என்னண்ணை  நான் முட்டாளைப் பற்றிக் கேட் டா எதோ தவறு பற்றி சொல்லுறியள்.

சரவணை : அவசரப்படாத ,கதையைக் கேள் முதல்ல . அதைப்போலத் தான் இந்த முட் டாள் தனமும். எல்லோருமே வாழ்க்கையில எங்கோ சிலமுறையாவது  முட் டாள் தனமாய்   சில தவறுகளை செய்துபோட்டு '' ஐய்யய்யோ முட் டாள் தனம்  பண்ணிப் போட்டேனே '' என்று தலையில் கைவைக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஏன், பழம் பெரும் விஞ்ஞானி ஐஷக் நியூற்றன் கூட
முட்டாள் தனமாய் நடந்திருக்கிறார் தெரியுமே?

 நான்: என்னது?

சரவணை : ஐஷக் நியூற்றன்  ஒரு பூனை வாங்கி  அதற்கு ஒரு வாசலுடன்  கூடிய வீடு போன்று ஒரு கூடு வாங்கி  அதை வளர்த்து வந்தார். சிலமாதத்தில அப்பூனை  ஒரு குட்டியை ஈன்றது. குட்டிப் பூனைக்கும் இன்னொரு வாசல் வேண்டுமே என்று எண்ணிய நியூற்றன் ஏற்கனவே இருந்த வாசலுக்கு அருகில் ஒரு சிறிய வாசல் ஒன்றை அமைத்தார். அனால் பூனைகள் வெளியேறும்போது தாய்ப் பூனையின் பின்னால் குட்டிப்பூனை பழைய வாசலூடாக வருவதைக் கண்ட நியூற்றன் தனது முட்டாள் தனத்தை எண்ணிச்  சிரித்துக்கொண்டார் .
இது தெரியாமல் நடப்பது.ஆனால் தெரிஞ்சுகொண்டு முட்டாளாய் வாழ்வோர் தொகை கூடிக் கொண்டு தானே போகுது.

நான்; எப்பிடி எண்டு சொல்லுறியள்?

சரவணை : உனக்கு முன்னால தானே நடக்குது.  கடவுளிடம் தேவையானவற்றை வாங்கிவிடலாம் என்று 
கடவுளுக்கு காசும் பொருளும் கொட்டிக் கொள்ளும் கடவுளைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கூட் டம் ஒரு வகை.
 உண்டியலையும்  நிரப்பி  நாளாந்தம் உண்டு வயிற்றிலிருந்து  கழிவறையில் கழித்திடும்  [இவர்கள் நோய்கண்டு தம்மை காப்பாற்றிக் கொள்ள இயலாது வைத்தியசாலை சென்று அழுந்தி துடித்து செத்து தொலைந்தாலும்] அம்  மனிதர்களை சுவாமி என்று சுற்றிவரும் கூட்டம் ஒருவகை.
 கடவுள் என்றால் என்னவென்றே தெரியாது தங்களுக்குத் தாங்களே கடும் முறைகளை வகுத்துத் தண்டித்துக்கொண்டு தம்மை ஆன் மீக வாதிகள்  என கற்பனைகளைக்  கொண்டிருக்கும்  கூட்டம் வேறு.
 இப்படிப் பெருகிவரும் மனிதர்கள்  எத்தனை பெரியார் வந்தாலும் குறைஞ்சபாடில்லை . நாளுக்கு நாள் புதுப்புது முட்டாள்   நம்பிக்கைகள்  உதித்துக்கொண்டே இருக்கின்றன.

நான் : விவேகானந்தர் போன்றவர்கள் வாழ்ந்து சென்றாலும் பலனில்லை. ஒரு ஆச்சிரமம் திறந்தால்  பெருமளவில் உழைக்கலாம் எண்டு சொல்லிறியள் .

சரவணை : மனுஷனுக்கு பேராசை அதிகரித்துக்கொண்டே போறதால அதை வைச்சு பய பக்தியை உண்டாக்கி உழைக்கிறாங்கள். இவங்கள தேடிப்போற கூட்டம் போகட்டும். ஏனையவர்களுக்கு ஏமாறாமல் இருக்க இப்பிடி ஒரு எச்சரிக்கை-தினம் அந்த முட்டாள்களை  கருதித் தேவைதானே!

நான்: கலியுகத்தில அதர்மம்,அநீதி , கொடுமை ,முதலிய பல வளரும் எண்டு தானே சொல்லினம் . அதில சில வடிவம் தான் நீங்கள் சொல்லுற முட்டாள்  தனம் . அவையள் முட் டாள்  தனங்களை சுட்டிக்காட்டி ஏனையோரை அதனுள் விழாமல் தடுக்கவே இந்த முட் டாள் தினம் எண்டு சொல்லுறியள்.

சரவணை : சரியாச் சொன்னாய் பார்.

நான்: சரியண்ணை! பிறகு கதைப்பம்.

சரவணை : சரி! சரி! [muddaal-april fool ]

 ---- தொடர்பு: கயல்விழி 




0 comments:

Post a Comment