ரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்?

எம். ஜி. ஆர். மிக துணிச்சலும் கோபமும் உடையவர். அதிக அனுபவப்பட்டவர் எம். ஜி. ஆர். சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
தனி ஸ்டைல், வேகம், சிறுவர்களையும், இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது. எம். ஜி. ஆர். அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும் போது இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப் போனார். தலைமுறை இடைவெளி போல் அந்த மாற்றம் நடந்தது.
பெரியவர்கள், பெண்கள் எம். ஜி. ஆரையும் இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர். இளம் பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்.
அவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார். காரணம் அவரது அழகு, சிவப்பு நிறம், சிரிப்பு, நடனம், ரஜினி கறுப்பு என்பதால் தனுஷை சொன்னது போல் இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்.
பில்லா படத்திற்குப் பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது. பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை. அப்போது ஆக்ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்சங்கர் ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது.
இது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாகக் கொடுக்கலாம் என நினைத்தாரோ அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ பாலாஜி தெரியாது படம் தீயாய் ஓடியது.
பைரவி படத்தின் போது ரஜினிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தானு. ஆனால் இதற்குப் பின்னர் தான் பில்லா வெளிவந்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்.
மஞ்சள் பத்திரிகைகள் என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகைகள் ரஜினியையும் எம். ஜி. ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் ரஜினிக்கும் எம்.ஜீ. ஆருடன் நடித்துக் கொண்டிருந்த லதாவுக்கும் இருக்கும் பழக்கம் இதைப் பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது. லதா எம். ஜி. ஆர் கிசு கிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
உண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் செய்தி நடிகை லதாவை ரனினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது.
இதனால் எம். ஜி. ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும், ரஜினிக்கு எம். ஜி. ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம் பயந்தது. ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே. இதை அவரிடம் விளக்கவும் முடியாது. எம். ஜி. ஆரும் கேட்கமாட்டார். முதலில் உதை அப்புறம் தான் பேச்சு இது எம். ஜி. ஆர். பாணி.
இன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருப்பதை காரில் சென்று கொண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார். உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார். ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை ரஜினி மிகக் கோபத்தோடு இருக்கிறார்.
அவ்வளவுதான் ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர்
குலை நடுங்கிப் போனார். 20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது. எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர். ரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது.
எம். ஜி. ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்.
பத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி. சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி. உட்காருங்க சாப்பிடுகிaர்களா? எனக் கேட்டாராம். பரவாயில்லை என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள். சிலருக்கு ரஜினி மீது கோபம். நாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரென். நீங்க யாரும் வரவேண்டாம். ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபிசுக்கு அனுப்பிடுறே என்றாராம்.
அப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக.


உதைப்பேன் என்றாராம் ரஜினி. சிறிதும் தாமதிக்காமல் அதிர்ந்தார்கள் நிருபர்கள். ரஜினி தனது திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு முதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்த போது எம். ஜி. ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி. அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.

No comments:

Post a Comment