இலவு காத்த கிளி போல...!


இலவு காத்த கிளி போல
 நான் காத்திருக்க
 என் காதலை அறியாமலே
என்னை 
உன் காதலுக்கு இரையாக்கி
 அலைய வைத்து 
காதல் உணர்வை 
கொன்று போனதால்
தென்றல்  கூட 
புயலாக மாறினாலும் 
உன் நினைவு
விழுந்துவிடாது தொடரும் 
  
 தென்றலின் சாரலில் மூழ்கி 
 ஞாபகமே  ஆளுமையாகுதடி

உடற்பசிக்காக
 காதலித்து இருந்தால்
 என் காதலை
தென்றலில் 
பறக்க விட்டு இருப்பேன்

நீ என்னை 
காதலிப்பாய் என எண்ணி
ஆசை கொள்ளாமல்
 உயிர் என கொண்டதால்
இலவு காத்த கிளி போல 
நம்பி காத்திருந்ததால்

உன் நினைவை 
தென்றலில் கரைக்க முயன்றும் 
முடியாமல் தவிக்கிறேன்

காலையடி அகிலன்

No comments:

Post a Comment