மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள்
இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று நாம் அனைவரும் அறிவோம். நாம் வாழும் காலமெல்லாம் இது தொடர்ச்சியாக ரத்தத்தை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாய்ச்சும் வேலையை செய்து வருகிறது. இரத்தத்துடன் ஆக்ஸிஜன் மற்றும் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உடலின் திசுக்களுக்கு தமனி என்ற இரத்தகுழாய்கள் வழியாக கொண்டு சேர்க்கிறது.
இந்த கடினமான பணியை செய்ய, இதயத் தசைகளுக்கும் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் தேவைப்படுகிறது, இது இருதய இரத்தக்குழாய்களின்
(coronary arteries )நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகிறது.
இதயநோய் மாரடைப்பு ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணியாக கூறப்படுகிறது. இதயநோய் என்பது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் தடங்கள்கள் ஆகும். இது இதயத்தின் தசை சுவர்களுக்கு (the
myocardium) செல்லும் இரத்த ஓட்டங்களில் தடை ஏற்படும் போது நிகழ்கிறது.
காரணங்கள் எதுவாகினும் பெரும்பாலான மாரடைப்பு நோயாளிகளின் அனுபவத்தின் அடிப்படையில், ஏறக்குறைய மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் தெரியவந்ததாக கூறும் அறிவுரைகளை நாம் புறக்கணிக்க கூடாது !
இந்த அறிகுறிகளில் 2 அல்லது 3 பொதுவாக அதிகமானோருக்கு அவ்வப்போது நிகழும் ஆகையால் அதற்காக மாரடைப்பு என்று பயம் கொள்ளத்தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பதில் தவறொன்றும் இல்லைதானே ! மாரடைப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு. சிலருக்கு ஒரு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.
எனவே, நீங்கள் தினமும் இந்த அறிகுறிகளில் 5 அல்லது அதற்கு மேல் அனுபவித்தால், நீங்கள் ஒரு நல்ல இருதய ஸ்பெஷலிஸ்டை பார்ப்பது நல்லது என்பது அனுபமிக்க மருத்துவர்களின் கருத்தாகும்.
அவற்றிற்குள் செல்வதற்கு முன் மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம், இவற்றை நினைவில் கொள்ளவும்:
- மாரடைப்பு ஏற்படும்போது லேசான வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அறிகுறிகள் சிறிது சிறிதாக ஏற்படலாம் அல்லது தீவிரமாக ஒரே நேரத்திலும் ஏற்படலாம். சிலருக்கு தொடர்ச்சியாகவும், மற்ற சிலருக்கு பல மணி நேரங்கள் இடைவெளி விட்டும் வரலாம்.
- அதிக அளவு சர்க்கரை (நீரிழிவு) நோய் உள்ளவர்களுக்கு இலேசான அறிகுறிகளோ அல்லது எவ்வித அறிகுறியும் இல்லாமலும் மாரடைப்பு நிகழ வாய்ப்புள்ளது.
மாரடைப்பின் பொதுவான அறிகுறியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்பு வலி அல்லது மன உலைச்சல்/அசௌகரியம் ஏற்படுவதாகும்.
- பெண்களில் அதிகமானோருக்கு மூச்சடைப்பு, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல், அசாதாரண சோர்வு மற்றும் தோள்களில், முதுகில், மற்றும் தாடைகளில் வலி ஏற்படுவதைக் காணலாம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர், (அல்லது அதற்கு குறைவான நாட்களிலோ) தோன்றும் 10 அறிகுறிகள்:
1/ மூச்சுத் திணறல்: இரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. “சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு நெஞ்சில்/மார்பில் அழுத்தமோ, வலியோ ஏற்படாமல் தீவிர மூச்சடைப்பு ஏற்படும்” என Nieca Goldberg, MD, clinical associate professor of
medicine at the NYU Langone Medical Center in New York City கூறுகிறார். நீங்கள் மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் ஓடிவிட்டு நிற்கும் போது எப்படி மூச்சு வாங்குவீர்களோ அது போல் நீங்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் நிகழும். மாரடைப்பு நிகழும்போது மார்பில் உலைச்சலும் மூச்சுத்திணறலும் இருக்கும். சில நேரங்களில் மார்பு உலைச்சல் இன்றி மூச்சை உள்ளிழுக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
2/ தலைச்சுற்றுதல் மற்றும் வியர்த்தல்:
மூளையின் முறையான செயல்பாட்டுக்கு நிறைய இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதால் குறைந்த இரத்தம் மூளையை அடையும் போது, அது உடல் ரீதியான செயல்பாடுகளை பாதிக்கிறது. மாரடைப்பு காரணமாக
சுயநினைவுஇழப்பு
அல்லது உடல் லேசாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். மேலும் அரித்மியாஸ் எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு ஆபத்தான அறிகுறியாகும்; குளிரான சூழ்நிலையில் திடீரென வேர்ப்பது மாரடைப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். ஒரு நாற்காலில் நீங்கள் ஓய்வாக அமர்ந்து இருக்கும்போது தீடீரென கடினமாக வேலை செய்து முடித்தவுடன் வரும் வேர்வையை போல் கொட்டினால் அது மாரடைப்பின் அறிகுறி என அறிந்து கொள்ளலாம் என டேவிட் ஃப்ரை, MD, க்ளீவ்லாண்ட் கிளினிக்கின் கார்டியலஜிஸ்ட், பி, எல், எல், கூறுகிறார்.
3/ களைப்பு:
தினமும் தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படுதல் இருதயம், மூளை மற்றும் நுரையீரலுக்கு போதிய அளவு இரத்தம் ஓட்டம் நடைபெறாததால் ஏற்படலாம். நாளுக்கு நாள் சோர்வு அதிகமாகி அன்றாட வேலைகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படத்தொடங்கும். நாளடைவில் தொடங்கிய ஒரு சிறிய வேலையை கூட முடிக்க முடியாமல் திணறல் ஏற்படும். இவ்வகை அறிகுறிகள் பெண்களுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசாதாரணமான தொடர்ச்சியான சோர்வு மாரடைப்பின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.
4/ மார்பு,பின்புலம், தோள்பட்டை, கை மற்றும் கழுத்து வலி:மாரடைப்புக்கு மிகவும் பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான காரணம் ஆகும். இந்த வலி இதய நோய் தாக்குதலுக்கு ஆரம்ப சிக்னல் ஆகும். ஆரம்பத்தில் மார்பில் வலி ஏற்படும் போது, பீதி அடையும் மக்கள், ஒரு சில சிகிச்சை மற்றும் டெஸ்ட்களுடன் அது குறைந்தவுடன் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றனர். ஆனால் அதே வலி பிறகு தோள்பட்டை, கை, மற்றும் முதுகில் பரவுகையில் சிக்கல் இருப்பதாகக் கவனிக்கிறார்கள்.
5/ வீக்கம்:
இருதய செயலிழப்பு காரணமாக உடலில் அதிக திரவம் திரட்டப்படுவதால் உடலில் சில பாகங்களில் வீக்கம் ஏற்படலாம் (பெரும்பாலும் காலில், கணுக்கால், கால்கள் அல்லது அடிவயிற்றில்) மற்றும் திடீரென எடை அதிகரிப்பு, மற்றும் சில நேரங்களில் முற்றிலும் பசியற்ற நிலையும் ஏற்படலாம்.
6/ இனம்புரியாத பலவீனம்:
மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்னதாக சில சமயங்களில் சிலர் கடுமையான, விவரிக்கப்படாத பலவீனத்தை அனுபவிக்கிறார்கள். "ஒருவர் தன் விரல்களுக்கு இடையே ஒரு காகிதத்தை வைத்திருக்க முடியாது போல தோன்றும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். இது எந்த வலிமையும் இல்லாத காய்ச்சல் போல் இருக்கிறது. இது எதிர்காலத்தில் ஒரு மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது என எச்சரிக்கையாகும்!
7/வேகமான அல்லது ஒழுங்கற்ற நாடித் துடிப்பு: ஏதோ ஒரு தருணத்தில் இதயத்துடிப்பில் வேறுபாடு இருப்பது பற்றி பயப்பட தேவையில்லை என்று கூறும் மருத்துவர்கள், அடிக்கடி இது போல் ஏற்படுவது குறிப்பாக பலவீனம், தலைச்சுற்று அல்லது மூச்சு அடைப்புடன் சேர்ந்து வருவது மாரடைப்பு, இதய செயலிழப்பு, அல்லது இரத்த உறைவு ஆகியவற்றின் காரணமாக இருக்கலாம். உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிடில் பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது திடீர் மரணம் கூட ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.
8/ சீரற்ற செரிமானம்:
அஜீரணம்,வயிறு வீக்கம் மற்றும் நெஞ்சு எரிச்சல் இவை மூன்றும் சேர்ந்து அடிக்கடி ஏற்படுதல் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.இது மாரடைப்பு அல்லது இதயநோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
9/அலைபாயும் மனம்:
மாரடைப்பு ஏற்படுவது ஆழ்ந்த கவலையும் அல்லது மரணத்தின் பயத்தையும் கூட ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் பெரும்பாலும் "மரணத்தின் விளிம்பு அனுபவத்தை " அனுபவித்துப் பேசுவதை காண முடிகிறது. எந்த வெளிப்படையான காரணத்திற்காகவும் உணர்ச்சியின் உணர்வுகள் பொதுவானவை.
10/ இருமல்:
நுரையீரலில் இருக்கும் திரவம் திரட்சியின் விளைவாக தொடர்ச்சியான இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில்,சிலருக்கு வாய் வழியாக இரத்தம் வெளியேறுவதும் நிகழும்.
ஆதாரம்:Source: nhlbi.nih.gov