எந்த வித ஐயத்துக்கும் இடமின்றி,நிரந்தரமாக கொடுக்கல் வாங்கலை அல்லது வணிக நடவடிக்கை களை பதிவதற்கு,உருக் நகர, ஒரு பெயர் தெரியாத தனிப்பட்ட சுமேரியரின் விடா முயற்சியின் தேடுதலின் பயனாக , கி மு 3300 ஆண்டு அளவில் எழுத்து உண்டாகியதாக கருதப் படுகிறது. எனினும் சிலர் இது புத்திசாலியான நிர்வாகிகளும் மற்றும் வணிகர்களும் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டத்தால் கண்டு பிடித்து இருக்கலாம் எனவும் இன்னும் வேறு சிலர் இது எந்த வித தேடுதலாலோ அல்லது முயற்சியாலேயோ கண்டு பிடிக்கப் படவில்லை என்றும், தற்செயலான ஒரு வெளிப்பாடு எனவும் கருது கின்றனர். மேலும் இது ஒரு திடீரென தோன்றியது இல்லை என்றும் ஒரு நீண்ட காலத்தின் ஊடான பரிணாம வளர்ச்சி யால்
ஏற்பட்டது என்றே பலர் கருது கின்றனர். எது எப்படியாயினும், நன்கு பலரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோட்பாடு என்னவென்றால், இது-எழுத்து-,களி மண் டோக்கன் கணக்கிடும் முறையில் இருந்து பரிணாமித்தது என்பதே ஆகும். அப்படியான டோக்கன்கள் பல, மத்திய கிழக்கு தொல் பொருள் பிரதேசங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவை எளிய, சமமான தட்டில் இருந்து மிகவும் கடினமான சிக்கலான வடிவங்களில் [varying from simple, plain discs to more complex, incised shapes] கி மு 8000 இல் இருந்து கி மு
1500 வரை காலத்தை கொண்டவையாக காணப் படுகின்றன. இந்த மூன்று பரிமாண டோக்கன்கள், இரண்டு பரிமாண பதிவாக களி மண் உறையில் பதியப் பட் டதே எழுத்தின் பரிமாண வளர்ச்சியின் முதல் படியாகும் . சுமேரியரின் கியூனிஃபார்ம் எழுத்து பிறந்து பல ஆண்டுகள் கடந்தும் டோக்கன்கள் பாவனையில் இருந்தது தெரிய வருகிறது.எனவே டோக்கன்கள் எழுத்து பிறப்பதற்கு துணையாக இருந்ததாக மட்டுமே கருதலாம். அதுவே எழுத்தாக மாறியதாக கருத முடியாது என நம்புகிறேன். என்னினும் இறுதியாக டோக்கன்கள் முற்றிலுமாக, முத்திரைகளின் மேல் டோக்கன்களின்
பதிவுகள் மூலம் மாற்றிடு செய்யப் பட்டன. அந்த பதியப் பட்ட குறியீடு நாளடைவில் எழுத்தாக பரிணமித்தது எனலாம். எனினும் களி மண் டோக்கன்கள் மட்டுமே முதலாவது கணக்கிடும் முறை அல்ல, 20 ,000 ஆண்டுகளுக்கு முன்பே, மேல் பழைய கற்கால மக்கள் [Upper Paleolithic people],குகைகளின் சுவர்களில் சரிபார்க்கும் குறி யையும் [tally marks] மற்றும் சிறிய குச்சி களில் சரிபார்க்கும் வெட்டு அடையாளங்களையும் [hash marks] விட்டுச் சென்றுள்ளனர்.
ஆகவே,சுருங்கக் கூறின், எழுத்து கணக்கிடும் அல்லது ஒரு எண்ணும் முறைமையில் இருந்து உருவாக்கினதாக வரலாறு சான்றுகளுடன் எடுத்து இயம்பு கிறது. ஆனால், இந்த அடிப்படை உண்மையை, தமிழை விட எந்த ஒரு மொழியாவது அங்கீகரி த்துள்ளதா? ஏனென்றால்,தமிழ் ஒன்று தான் இதை ஏற்றுக் கொண்டு, அதன் அகர வரிசையை 'நெடுங்கணக்கு' என அழைக்கிறது.நெடுங்கணக்கு என்றால் நீண்ட கணக்கு என்று பொருள். எனவே தமிழர்கள் மட்டும் தான் கணக்கிடும் அல்லது எண்ணும் முறைமையின் விளைவை, அதாவது எழுத்தின் தோற்றத்தை சரியாக விளங்கிக் கொண்டார்கள் என நாம் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி கருதலாம். அதனால் தான் தமிழ் அகர வரிசையை தமிழ் நெடுங்கணக்கு என அழைக்கின்றனர். இன்று நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி அழைக்க தொடங்கி விட்டார்கள்.
'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என பண்ணிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் கூறுகிறார். ஆனால்,திருவள்ளுவரோ, கிருஸ்துக்கு முன்பேயே, தனது குறள் 392 இல், 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்கிறார். அதாவது,எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர் என்கிறார். அதே போல இன்றைய திரைப் படமான "சரஸ்வதி சபதத்தில் ", "அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி... உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்... எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்..... ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்... " என்ற வரிகளையும் கேட்க்கிறோம். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன' என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் கூறிச் சென்றார் எனினும், நன்மையையும் தீமையும் கடவுளே தருகிறார் என பொதுவாக நம்பவைக்கப் பட்டனர். மேலும் சங்கம் தமிழ், எழுத்து பிறந்த அந்த நொடியையும் கூறிச் செல்கிறது. காதலர்கள்,தனது தலைவியின் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலமான, பட எழுத்து "தொய்யில் " பற்றியும் அது கூறுகிறது. உதாரணமாக, கலித்தொகை 18, " .... ஐயனே! என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்தனவே அதனையும் எண்ணிப்பார் ... " என்பதன் மூலம் தொய்யி லும் ஒரு செய்தி கூறுவதை சுட்டிக் காட்டுகிறது.
"அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்"
ஆத்திசூடி 'எண் எழுத்து இகழேல்' என்றும் ஏழாம் நூற்றாண்டு தேவாரம், "எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்! என்றும் திருக்குறள் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' , மற்றும் குறள் 1285 இல், 'எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.' என்றும் எண் , எழுத்து ,இவை இரண்டையும் பற்றி ,அதன் முக்கியம் பற்றி கூறுகிறது. இவை எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால், அது சுமேரிய தமிழனாக இருந்தாலும் சரி,அல்லது சிந்து தமிழனாக இருந்தாலும் சரி, அவர்களே எழுத்தை கண்டு பிடித்த முதல் மக்கள் என்பதே ஆகும்! மேலும் இந்த எழுத்து கணக்கிடும் அல்லது எண்ணும் முறைமையில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்தது மட்டும் அல்ல, உலகின் முதலாவது நாகரிகத்தை உண்டாக்கியதும் ஆகும்!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
முற்றிற்று
No comments:
Post a Comment