ஆட்டம் காணும் வாழ்வில்
யாருக்கும் வெட்கம் இல்லை!
மறந்து போகும் மானுட வாழ்விற்கு
மனமும் தினமும் இனிமை கொடுத்துடவே
எண்ணமெல்லாம் மாயை ஈடேறி
வெட்கத்தை தீண்டியே பணத்தை நாடுதே!
ஆசைகள் நீண்டு வர
நெஞ்சம் மெல்லாம்
காதல் கூடம் செய்வோம்!
தோல்வி இங்கு நீண்டு வர
வஞ்சகம் கொள்கிறோம்!
பொறாமை இங்கு நீண்டு வர
பஞ்சம் இல்லா வசந்தம்மான வாழ்வில்
வெட்கத்தை தொலைக்கிறோம்!
வாழ வழி இன்றி உயிர்கள் தத்தளிக்க
மனமும் கரையவில்லை கரமும் நீட்டவில்லை
அன்பும் துடிக்கவில்லையே!
பணமென்னும் மாயை பம்பரமாய் சுழற
உயிர்களின் மதிப்பும் அறியவில்லையே!
யாருக்கும் வெட்கமும் வரவில்லையே!
இயற்கையில் இருப்பது பேரமைதியே
வறட்சி அடைந்து போகையிலே
வஞ்சனையும் ஓயவில்லையே
யாருக்கும் வெட்கமும் வரவில்லையே!
-காலையடி, அகிலன்
No comments:
Post a Comment