ஏழையின் வாயில் எட்டாத பாலை
சிலையில் கொட்டி என்ன பயன்?
ஆசைகள் பெருகி ஆலயங்கள் அலைவோர்
பூசைகள் பலசெய்து என்ன பயன்?
நாவால் நல்லதையே பேச அறியாதோர்
பாவாய் இறை பாடி என்ன பயன்?
புறம் பேசும் பொறாமை யுடை இழியோர்
பிறதட்டை போட்டு என்ன பயன்?
நோவ நடக்கும் நெஞ்சமிலா மனிதரெலாம்
பாவமன்னிப்புக் கேட்டு என்ன பயன்?
பலியிடப்படும் மிருகங்கள் ஆலயத்தில்
பலிபீடம் இருந்து என்ன பயன்?
குலத்தோடுகூடி க்குலாவாதோ ரெலாம்வீதி
வலம் வந்து வணங்கி என்ன பயன்?
மனிதத்தை மறந்த மனிதர்க ளெல்லாம்
புனித நூல்கலைச் சுமந்து என்ன பயன்?
ஆன்மாவை வழிப்படுத்த இயலாநிலையில்
ஆலயங்கள் இருந்து என்ன பயன்?
செல்லத்துரை மனுவேந்தன்
"ஊட்டி வளர்த்தவள் பண்பை வளர்க்காததால் வந்த வினை
ReplyDeleteசமயத்தை போத்திதவன் சடங்கை ஏற்படுத்தியதால் வந்த வினை
ஆசைகளை அடக்கும் ஆலயங்கள் இல்லாததால் வந்த வினை
தேவாரத்தின் உள் பொருளை சொல்லாததால் வந்த வினை
அன்பு தான் கடவுள் என கூறாததால் வந்த வினை
அடியார்க்கும் அடியேன் என்ற சுந்தரரை அறியாததால் வந்த வினை
புனித நூலின் மனிதத்தை போதிக்க மறந்ததால் வந்த வினை
ஆலயங்கள் வியாபார நிலையமாக மாறியதால் வந்த வினை"
உங்கள் கருத்துக்களும் நல்ல வினைகள் உள.
Delete