அர்த்தம் ஆக்கிவிடு!
வலி தந்த உணர்வுகளை
உன்னில் உறங்க செய்து
மனம் உடைந்து போகாமல்
வலியின் உணர்வில்
உளியை உருவாக்கி
உன்னை செதுக்கி விடு!
உளி வடிவிலே
புதிய சக்தி உன்னில் பிறந்து
புது விடியல் உனக்காக விடியும்
இதனால் உன் விடியல்
மங்காது மறையாது
உலகிற்கு புது செய்தி சொல்லும்.
மன விழியை
இருளில் உறங்க செய்துவிடாது
உளி கொண்டு செதுக்கி
விழித்துக் கொள்ள வை
சலிப்பின்றி விடியலும்
விடிந்து கொண்டு இருக்கும்.
நீ மானுடனாய் இருந்தாலும்
உன்னில் உளி இல்லை எனில்
உனக்கு இன்பம் இல்லை
இன்பம் இல்லை எனில்
வாழ்வில் தான் ஒளி வருமா?
---காலையடி அகிலன்
No comments:
Post a Comment