நிலத்தை உழுது
இடையூர்கள் நீக்கி
நெல்மணிகளை புதைத்து
காலைமாலை வயலை காத்திடவே
கண்விழித்த தங்க ரத்தினங்களே!
ஓடி வரும் வாய்க்கால் நீர்
சல சல என சத்தம் போட
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை பசேல் என
இருக்கும் வயற் காட்டில்
கல கல என விளைந்த மணிகளே!
வீசும் தென்றலில்
தில் தில் என சத்தம் போட
விளைந்த கதிர்களை
வண்ண பறவைகள்
வட்டமிட்டு கொஞ்சி முத்தமிட!
சாய்ந்திருந்து விரட்ட
சாய்மானமும் வரவில்லையே
பொன்னுரத்தினமே!
நெஞ்சை நிறைக்கும் அமுதே
விவாசாயின் கரங்களால்
விளைந்த கனியே!
கண்ணுக்கு நயமா விருந்து கொடுத்து
உன் அழகு தரும் சிலிர்ப்பு வேறு
எவ்விடத்திலும் காணலையே
தங்கரத்தினமே!
No comments:
Post a Comment