சுழல் காற்றில் சிக்கிய
ஒற்றை இலையாய் இருக்க
என் நினைவு சோலையிலே
உதிராமல் காயங்கள் இருக்கையிலே
என் இதயம் மௌனமாய் கொதிக்கிறது
என் விதி மீது கோபம் வந்து போகையிலே
என் கண்களில் மின்னல் பட்டு தெறிக்குதே!
வாய் நோகக் கத்தினாலும்
யார் தான் கேட்பார் என் வேதனையை
உயிர் வறண்ட மண் உயிர்க்க
மழையை வேண்டி நிற்பது போல
இனிமை இன்றி
என் தனிமையும் விடியலையே!
நிழல் தேடி
புலம்பும் என் மனம்
கை நீட்டுகிறது வாழ்வுக்காய்
உதிர்ந்து போகும் காலங்களில்
மரணித்து போகும் வாழ்வில்
மிஞ்சி வருவது தான் என்னவோ!
காலையடி,அகிலன் ராஜா
0 comments:
Post a Comment