ஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018


தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
.தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் பேசும் அனைவர்க்கும் உரித்தாகட்டும். 
உலகில் தன்  தாய் மொழியில் மட்டும் வெறுப்புக் கொண்ட ஒரு இனம் எனில் அது தமிழினமாகவே இருக்க முடியும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. நெருப்பில்லாமல் புகை வராது என்பது நம் பழமொழி.உலகில் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களில் சிறுபகுதியினர் தாய் மொழியினை வளர்க்க ஆர்வம் கொண்டு உழைத்தாலும் அவ் உழைப்பின் பிரதிபலன் மிகமிகக் குறைவாகவேதென்படுகின்றன.தமிழன் தன்  பெருமை உணராது பெரும்பாலும், அடுத்த இனத்தவன்- அதுவும் வெள்ளைத்தோல் கொண்டவன் -அனைத்து வழிகளிலும் தம்மிலும் பார்க்க மேம்பட்டவன் என்னும் உணர்வு, தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக ஆழமாகவே   காணப்படுகிறது.அதுமட்டுமல்ல,
* தமிழன் பிரதேசம் /சாதி/ஆங்கில மொழிப் பாவனை தொடர்பாக  தமிழனை குறைத்து ஒதுக்குதல்.
*உதவி செய்யவந்த தமிழனிடம் மேலும் சூறையாடல்.
*தமிழ் அதிகாரியாக தொழில்புரிந்தால் ஏனைய மொழி கொண்டோருக்கு நேர்மையாகவும்,தமிழனுக்கு அச்சேவை கிட்டாது செய்தல்.
*பொது இடங்களில் தமிழர் சொத்துக்கள் எனில் அவைமட்டும் சேதமாகும்படி கவனமற்று நடத்தல்.
*உறவுகளில் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், அச் சம்பவத்திற்கு இன்னும் காது ,மூக்கு வைத்துப் பேசுதல்.
* ஒருவன் எடுக்கும் முயற்சியினைப்  பாராட்டி ஊக்குவிக்க மனமின்மை.
*பொது இடங்களில் சந்திக்கும் போது அறிவார்ந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாது, யாரையாவது கேலி பண்ணும் விதத்தில் உரையாடல்.
*வீதிகளில் வேற்றுநாட்டுக்காரனைக் கண்டால்  ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லும் அதே தமிழன் அடுத்ததாகச் சந்திக்கும்  தமிழனைக்கண்டால் தலையினை கவிழ்த்தி நிலம் பார்த்து செல்லல்.  
இவையெல்லாம் தமிழர்களுக்கிடையே பெரும் இடைவெளியினையே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.அவ் இடைவெளி தாய் மொழி மீதும் வெறுப்பினையே உருவாக்கி வருகிறது.

தமிழனை அழிக்கிறான்,அழிக்கிறான் என்று கூக்குரலிடும் தோழர்களிடம்  ஒன்றுமட்டும் நாம் கூறிக் கொள்ள விளைகிறேன். தமிழனை அழிக்க ஆழும் இனவாத அரசுகள்  தேவையில்லை. மேற் கூறிய ஆயுதங்களே போதுமானவை.
பிறந்த புத்தாண்டிலாவது தமிழர் மனங்களில் நல் மாற்றங்கள் ஏற்படவும் தமிழர் வாழ்வும்,மொழியும் ஒருங்கே செழித்தோங்க  நாம் வாழ்த்துகிறோம். -தீபம் 
      

No comments:

Post a Comment