மெல்லத் தமிச் இனி வாசுமா? அல்லது அசிந்து ஒசியுமா?

மன்னிக்கவும். தமிழ்  சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு 'ழ' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது. மெல்லத் தமிழ்  இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பல காரணிகள் உள்ளன: * வேறு மொழிகளில் உள்ள பலவிதமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் நம் தமிழ் மொழியில் இல்லாது இருந்தும், அதற்கான புது எழுத்துகளையோ, அல்லது குறிகளையோ உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தாது, ஏற்கனவே இருந்த 'ழ' என்ற எழுத்திற்கு அழகு கூட்டுவதாகக் கூறிக்கொண்டு,...