பக்தி மார்க்கம்

சைவ சமயத்தில் வழிபாடுகள் சரியை, கிரியை ,யோகம் ,ஞானம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே!

அவை சைவ நாற்பாதங்கள் .சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என அறியப்படுகின்றன
  
சரியை:ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

ஆனால்  இன்று கைத்தொலைபேசி கொண்டு படம் பிடித்தல் , புதிய உடுப்பு காட்டுதல்,சாதம் போடல் , ஒவ்வொருவர் அலங்காரங்கள் ஒப்பிடல் ,அடுத்தவரை வசைபாடுதல் ,சாதி ரீதியில் ஒதுக்கி வைத்தல்  என பலவகையிலும் இவ் வழிபாடு ஒழிந்துவிட்ட்து. எனலாம்.

ஆலயமே வியாபாரநிலையமாகவும் .பக்திநெறி மக்கள் முன் படுத்துவிட்ட நிலையிலும் மனிதன் பின்பற்றுவதற்கு  ஏனைய பாதங்களாகிய கிரியை ,யோகம் ,ஞானம் என்பன கனவிலும் நினைக்க முடியாத நெறிகளாகும்.

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.

மேற்குறிய பக்திக்குரிய எந்த உணர்வுகளும் மனிதர்களிடம் இல்லாதபோதும் எதோ தம் உடலை  வருத்தும் வழிகளினால் கடவுளை பயப்படுத்தி தன்  வழிக்கு கொண்டு வந்திடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு என்னன்னவோ எல்லாம் பண்ணுறான் மனிதன்.

ஆலயங்களுக்கு வருமானம் வருமெனில் இதுபோன்ற பல   மூட நம்பிக்கைகள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
                                                                      


0 comments:

Post a Comment