புதிய ஆங்கில வருடமே...!


வறட்சி இன்றி வாசம் செய்யும் 
ஆங்கில வருடமே
வெப்பம் கொண்டு
மனித நேயத்தை வருத்தாது 
மனித நேயத்துக்கு விவேகம் கிடைத்து
பிணக்குகளுக்கு வழிவிடும் ஆண்டாக
மலர வருக வருக!

இலட்சியத்தின் விடியலுக்காய்
ஏங்கும் மனங்களிக்கு
வெளிச்சத்தை  பொழிந்துவிடவே
கதிரவனாய்    
உதித்திட வருக வருக

கஷ்டநிலை நீக்கிவிட
ஜோதி தீபம் வானில் இருந்து
ஒளிர்ந்து விட 
விண்ணை முட்டும் வேதனைகள்
அறுக்க  வருக வருக!

அதர்மத்திற்கு வளையாத
சொர்க்கபுரி ஆண்டாக நீ திகழ
சந்தோச  சரண கோசம்
உலகம் எங்கும் வியாபித்து விட
அழகான வருடம் மென
அழகாக வரவேக்க
மதிக்கின்ற மாணிக்கம் மென
மலர் மாலை போட்டு விடவே
மலர்ந்து வருக! வருக!

[காலையடி,அகிலன்]

No comments:

Post a Comment