வீசும் பூங்காற்றே ..!





வீசும் பூங்காற்றே  
என் னவளைக் கண்டாயா?
நான் நானாக இல்லை 
அவளின்  பிரிவின் வலியால் 
 சந்தோசங்கள் கரைந்து
துன்பங்கள்  சோர முயல்கிறது என்று  
 என் நிலைமை அவளுக்கு கூறி 
அவள் சம்மதம்  வாங்க
 எனக்காக  அவளிடம் 
 தூது  சென்று வருவாயா?



அவளைக்   கண்டு கொண்டால்,  
என்  மனம் இதயத்தோடு  அலை மோதி 
அவளிடம்  காதல் கொண்டதால்
அவளைக் கரம் பிடிக்க
 ஆசை வந்தது  என்று சொல்லு! 


என் காதல் பொய்யும்  இல்லை
புரிதல் அற்றதும் இல்லை
அவள் மீது கொண்ட காதல்
 என் மனதில்  
 இன்னும் சிதைய வில்லை 
உணர்வாக 
அவளின் வருகைக்காய் 
காத்து இருக்குது 
என்று கூறி வா!!

காலையடி,அகிலன் 

No comments:

Post a Comment