சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜாஎன தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளைபட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
                                                                                    

No comments:

Post a Comment