உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த பாலன்,"அம்மா அம்மா ,நான் தான் இந்த முறை வகுப்பிலே முதலாம் இடம் ,என்று புன்னகையோடு கூ றி ஆனந்தப்பட்டான்.
அப்பொழுது தாய் அழுதபடி மகனைக் கட்டி பிடித்து கண்ணீர் சிந்தினாள்.
பாலனோ செய்வதறியாமல் "அம்மா அம்மா என்ன நடந்தது ,ஏன் அம்மா அழுகிறீங்கள்" என்று கேட்க, பக்கத்துக்கு வீட்டு பாக்கியமோ "நீ கெதியாய் வெளிக்கிட்டு நில்,நான் வீட்டை பூட்டிக்கொண்டு வாறன்,எல்லோரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம்" எனக்கூறி தன் வீட்டை நோக்கி சென்றாள்.
பாலன் அம்மாவை பார்த்து" ஏன் அம்மா நாங்கள் வைத்தியசாலைக்கு போகவேணும்" என கேட்க, அதற்கு அம்மா பாலனைப் பார்த்து," உன்ர அப்பாவை வேலை செய்யிற இடத்தில யாரோ அடிச்சுப் போட்டார்களாம், அப்பா இப்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் ,வந்து பார்க்க சொல்லி வைத்தியசாலையில் இருந்து அலைபேசியில் சொன்னவை தம்பி" என்று அம்மா கண்ணீரும் கம்பலையுமாக கூறி
முடிக்கவும்," ஐயோ அப்பாவுக்கு என்ன நடந்தது ?ஐயோ
அப்பா" என்று அழுத வண்ணம் ,நானும்
வைத்தியசாலைக்கு வாறன் " என்று சொல்ல பாக்கியமும் "ஒ ,தம்பி நீயும் எங்களோட வா , எல்லோரும் சேர்ந்து போய் பார்த்திட்டு வருவோம் " கூறி முடிக்க,
குமாரின் முச்சக்கர வண்டியும் வீட்டு முன்பு வந்து நின்றது.
மூவரும் வண்டிக்குள் அமர்ந்ததும் ,வண்டி வேகமாக சென்று
வைத்தியசாலையை அடைந்தது.
ஏக்கத்துடன் சென்ற பாலனும் ,குமாரும் வைத்தியரிடம் தம் தந்தையின் நலன்களை விசாரித்தனர்.
தேவையான விபரங்களை எடுத்து கொண்டு தந்தையின் அறைக்குள்
நுழைந்தனர்.ஆனால் பணியில் இருந்த தாதியோ "இப்பொழுது தான் உங்கள் தந்தைக்குக்கு சத்திர சிசிக்சை நடைபெற்று முடிந்துள்ளது, அவர் மயக்கம் தெளிந்த பின்பு நீங்கள் வந்து அவரைப் பார்க்கலாம் "எனக் கூற மனம் நிறைய வேதனையுடன், கதவின் கண்ணாடியின் ஊடாக
தந்தையைப் பார்த்தனர்.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து, வாழ்வில் வெற்றி
கண்டவர் எங்கள் அப்பா, பிள்ளைகளின் கனவுக்காய் தினமும் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர். அவர் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததே மிகவும் அரிது. ஆனால் இன்றோ,வழக்கத்திற்கு மாறாக, வைத்தியசாலையில் ஓய்வாக இருக்கும் அப்பாவின் மனதில் புதைந்து இருக்கும் கனவை எண்ணி பார்க்க எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி அலைபாயத் தொடங்கியது.
அப்பாவும் , ரவியும் சொந்த சகோதரர்கள் .
அதனால் அப்பா ரவிச்சித்தப்பா மீது அளவு கடந்த
பாசம் கொண்டிருந்தார் . தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணி ,பக்கத்து வீட்டில் இருக்கும் கமலா ஏழையாக இருக்கிறாள், அவளின் மகளுக்கு சம்மந்தம் பேசி வைத்தால் அவளுக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தமாதிரியும் இருக்கும் என எண்ணி,
தன் தம்பி ரவியுடன் இது பற்றிப் பேச," அண்ணா நீங்கள் எந்த எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம் "எனக்கூறினான்
அதனைக்கேட்டவருக்கோ ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது.அதே மகிழ்ச்சியுடன் கமலாவும் சம்மதம் சொல்ல, திருமணமும் இனிதே நிறைவேறியது .
இதுவரை அன்றாட உணவுக்கே அல்லல் பட்டு வந்த கமலாவுக்கு ,
சொத்தின் மேல் ஆசை வர, அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும இடையில் ,தன் மகள் மூலம் பிரச்சனையை தூண்டி விட்டு மனக்கசப்புகளை உண்டாக்கி, அவர்களை நிரந்தரமாகப் பிரிக்க எண்ணினாள். காலபோக்கிலே அப்பாவின் மீது
உயிராய் இருந்த
சித்தப்பாவும் ,தான் மனைவியுடன் தனிக் குடித்தனம் போக வேண்டும் ,எனக்கூறி வீட்டை விற்று, தன் பங்கை பிரித்துத் தா என கேட்கவும், அப்பாவும் ஏக்கத்துடன் "தம்பி இது எங்கள் அப்பாவின் சொத்து ,இதை விற்க வேண்டாம் ,நீயே வைத்துக்கொள், நாங்கள்
இப்போதே வீட்டை விட்டு போகிறோம்" என்று கூறி
விட்டு, தன் நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று
வசித்து வந்தார்.அதன் பிறகு கடும் உழைப்பின் மூலம் சொந்த காணியொன்று வாங்கியவர், அந்தக்காணியிலே வீடு ஒன்றையும் கட்டினார்.
தற்போது தான் உண்டு தன் குடும்பம் என்று என
வாழ்ந்து வந்தவர் இன்று இந்த நிலையில் என எண்ணியபடி பாலன்
பெருமூச்சு விட்டான் .அந்த நேரம் தந்தையின் மயக்கம் தெளிந்து விட்டதாக தாதியார் கூறவும் , தந்தையை பார்க்க எல்லோரும் ஓடினார்கள்.
தந்தையும் "வாருங்கோ" என்று அன்புடன் அழைக்க தந்தையின் கரங்களைப் பற்றியபடி ,அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்கத்
தொடங்கினார்கள்
அதன் பிறகு அம்மா "என்னப்பா என்ன நடந்தது" என வினவ கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க ,நடந்த சம்பவத்தை சொல்ல தொடங்கினார்.
"தம்பி ,ரவியை கமலாவும் மகளும் வீட்டை வீட்டு துரத்திட்டினமாம் என்று கதிரேசன் சொன்னான், அதுதான் மனம் கேளாமல் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று போனனான்,அங்கு
தம்பியின் அலங்கோல நிலையை பார்க்க கோவம் வந்து விட்டுது, அப்ப தான் கமலாவின் வீட்டுக்கு சென்று கேட்க போக பெரிய
விவாதமாக , அதற்கு அவள் உந்தன் " தம்பி குடிகாரன், அவனோட வாழ முடியாது ,நீ இப்ப போ என கூறி என்னை அனுப்பி விட்டனர்.
அதன் பிறகு இரண்டு மூன்று பேர் வந்து என்னைப் பார்த்து ,இனிமேல் நீ கமலா வீட்டுப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது எனச்சொல்லி என்னை தாக்க தொடங்கினார்கள்.
நானும் தப்பி ஓடினான் அவ்வளவும் தான் நடந்தது, கண் விழித்து பார்க்கும் போது இங்கு இருக்கிறேன்" எனக் கூறி முடித்தார்.
மனைவியும் "உங்கட இரக்க குணத்தால் தான் இவ்வளவும் .நடந்தது
உங்களுக்கு நீங்களே முள்கிரீடம் வைத்தது போலவே நடந்துவிட்டதே என வேதனைப்பட்டாள்.
..காலையடி,அகிலன்,
0 comments:
Post a Comment