திருமூலரின் சில கருத்துக்களையும் சித்தர் சிவவாக்கியர் தம் பாடலில்
எடுத்துரைக்கின்றார்.
‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு
ஆலயம்’
என்ற திருமூலர் கருத்தினை,
‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது
ஏதடா
வாயினால் தொழுது நின்ற
மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில்
வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம்
இறையையே”
என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.
இறைவனை கோயில், பள்ளி
இங்கெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பேஅவன் ஆட்சி செய்யும் ஆலயம்
என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
என்ற திருவள்ளுவரின் கருத்தையும்
“மனத்து அடுத்து அழுக்கு
ஆறாத மவுனஞான யோகிகள்”
என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.
ஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம், நாட்டைத் துறந்து காட்டிலே
போய்க்கூட வாழலாம். ஆனால்
உள்ளத்தில் தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும்
மேற்சொன்ன விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே
குற்றங்களை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.
அப்படியானால் உண்மையான கடவுள்தான் யார்?
என்ற வினாவுக்குஅறிவுதான் இறைவன் என்று விளக்கம்
தருகின்றார் சிவவாக்கியர். அறிவுதான் இறைவன்
என்றால் அறிவாளிகள்
மட்டும்தான் இறைவனைத்
தொழஇயலுமோ? என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்களில்
நிறைத்துக்
காட்டுகின்றார்.
இதனைப் புரியாமல் இறை இருக்கும் இடத்தை விட்டு கோவில் என்றும்,குளமென்றும் நேர்த்தி என்றும் புதிதாக தோன்றும் ஜால வித்தைக்காரர்களை சுவாமிகள் என்றும் அறியாமை இருளுக்குள் மூழ்கி மானிட த்தோல் போர்த்தி அலையும் சீவனை[சிவனை] உணராத ஜீவன்களை நாம் எவ்வகையில் சேர்த்துக்கொள்வது.....?
தொகுப்பு:கலைவிழி.
0 comments:
Post a Comment