கடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.!!!---?

கடவுள் அனைத்தையும் கடந்தவைர்.அனைத்தையும் படைத்தவர். அனைத்து சீவன் களையும் படைத்தவன் எனில் வாழும் உயிரினங்களில் மனிதன் மட்டும் ,கோவில் ,பூசை ,நேர்த்தி ,அபிஷேகம்,  தானங்கள் என வாழா தொழிவது எனோ?

உழைக்காமலே , ஊரை க்கொள்ளை அடித்து உலையில் போட்டுஉண்டு கொழுத்துக்கொண்ட இனம் ஒன்று உண்டு. ``விதைக்காது விளையும் கழனி’’ என்று அந்த இனத்தைப் பேரறிஞர் அண்ணா கூறினார்.

அந்த இனம் வேதத்தை ஓத வேண்டும், ஓதுவிக்க வேண்டும் என்பது வரணாசிரமக் கடமை. யாருக்கு ஓதுவிக்க வேண்டும் என்றால், அந்த இனத்தைச் சார்ந்தவர்க்கு மட்டுமே. இப்படி இருந்தால் இந்த இனத்தின் வயிற்றுப் பசிக்கு வழி? பிச்சையெடுத்தல்.பிச்சையெடுத்தலை உஞ்சவிருத்தி என்று சொல்லிக் கொண்டார்கள்.

ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதற்குத் தேவையான அரிசியை உஞ்சவிருத்தியாகப் பெற்றுப் பசியாற வேண்டும்.பிடி அரிசியில் உயிர் வாழ்வதென்றால் எப்படி?

வேத, சாத்திரங்கள் அதுதான் என வரையறுத்து விட்டன. ஆனால் சமுதாயம் இவர்களைக் கீழாகக் கருதுமே! நாள்தோறும் பிச்சையிலேயே காலத்தைக் கழித்தால்...?

பார்த்தார்கள்.கடவுளைப் பிச்சைக்காரனாக்கினார்கள், பிச்சாண்டி என்றார்கள். அவாள் மொழியில் பிட்சாடனர் என்றார்கள். திருவண்ணாமலைக் கடவுளின் பெயரே அதுதான்.தங்களின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த ஏற்பாடு. என்றாலும்...பெண்டு, பிள்ளை, குட்டி என்று குடும்பம் பெரிதாகும்போது உஞ்ச விருத்தி கூடாது. முடியாது. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது?

தானங்கள் என்பதை உண்டாக்கினார்கள். ஊரையும் உலகையும் ஏமாற்றிட கடவுளை உண்டாக்கியவர்களுக்கு `தானங்களைஉருவாக்கவும் அதனால் மறு பிறவியில், மறுஉலகில் பலன்கள் ஏராளம் என்று புளுகிடவும் அதிகச் சிரமம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அந்தத் தானங்களையும் பவிஷ்ய புராணம் கூறுவதைப் பார்ப்போம்.தானமும் தான பலனும்(தானங்கள் பற்றி அக்னி புராணத்திலும் கூறப்பட்டுள்ளது). தனம் பெற்றிருத்தல் தானம் அளிக்கவே. உடை, உணவு, நீர், பொன், தக்ஷணை ஆகியவற்றைப் பிராமணர்களுக்குத் தானம் அளிப்பதால் துரதிருஷ்டம் தொலையும், அவர்களுக்கு வாழ்த்து கிடைக்கும். இன்றேல் மறு வாழ்வில் நோய், பசி, உடையின்மை காரணமாய் பிச்சை எடுக்க நேரும்.

யஜ்ஞ, யாகம், சமயச் சடங்குகள், விரதம், தானம், தக்ஷணை இன்றி முடிவு பெறாது. விரதங்கள் பற்பல என்பது போல் தானங்களும் பல வகைகள்
ஆகும்.

1) `அக்னிஷ்டிக தானம்குளிர்காலத்தில் ஒவ்வொருவரும் குளிர்
காய்வதற்கான அக்னியைக் காலை முதல இரவு முடிய ஏற்பாடு செய்தல். இதனால் கோரிக்கைகள் நேரும்.

2) `அபக தானம்புத்திரர்கள், பணியாளர்கள், செல்வம் ஆகியன பெற ஆயிரம் பாத்திரங்கள் தானம் செய்தல் வேண்டும்.

3) `அன்ன தானம்விஷ்ணுலோகம் அடைய அன்னதானம் செய்க.

4) `கல்ப தரு தானம்பொன்னால் கல்பதரு ஒன்றைப் பழங்களுடன் செய்து ஓர் அந்தணர்க்குத் தானம் செய்பவர் சூரியலோகம் சேர்ந்து, அப்சரசுகளால் சேவை பெறுவர்.

5) `கிருக தானம்கிருகம் () வீடு தானம் சிவலோகப் பிராப்தி தரும்.

6) `கோதானம்ஒரு படித்த ஏழை பிராமணனுக்கு அளிக்கும் கன்றுடன் கூடிய பசுதானம் முக்தி அளிக்கும்.

7) `சப்த சாகர தானம்பாவங்களிலிருந்து விடுபட உப்பு, பால், வெல்லம், சர்க்கரை ஆகியவற்றை ஒரு பிராமணனுக்குத் தானம் செய்யவும்.

8) `சய்ய தானம்’ (`சய்ய படுக்கை:) முக்தி பெற ஒரு பிராமணனுக்குப் படுக்கை தானம் நன்மை பயக்கும்.

9) `தாசி தானம்பட்டாடைகள் அணிவித்து, நகைகள் பூட்டி ஒரு வேலைக்காரியை ஓர் அந்தணருக்குத் தானம் செய்பவர்களுக்கு விண்ணுலகில் அப்சர ஸ்திரீகள் பணி செய்வர்.

10) `தட்டு () ஸ்தாலி தானம்செம்பு () மண்தட்டில் உணவைத் தானம் அளிப்பவர்களுக்கு வீட்டில் என்றும் உணவுக்குக் குறை இருக்காது.11) `தானிய மலை தானம்மலை போல் குவிக்கப்பட்ட தானியம், வெல்லம், தங்கம், நெய் ஆகியன பிராமணனுக்குத் தானம் செய்வது.

12) `துலாபாரம் () துலாபுருஷ தானம்ஒருவன் எடைக்கு எடை தானியம், தயிர், உப்பு, வெள்ளி, பொன் போன்றவற்றை அளிப்பது இது. இதில் பாதி பிராமணருக்கும், கால் பங்கு பூசாரிக்கும், மீதி ஏழைகளுக்கும் கொடுக்கும் தானம் இது. இதனால் சூரிய லோகம் அடையலாம்.

13) `பிரம்மாண்ட தானம்பொன் முட்டையின்மீது அரி, அரன், () அயன் உருவமைத்துப் பிராமணனுக்குத் தானமாகத் கொடுப்பதால் அத்துடன் அந்தணருக்கு தானியம், செருப்பு, குடை போன்றவை கொடையாக அளிப்பதால் ஒருவர் பாவங்கள் நீங்கும். கோரிக்கை நிறைவேறும்.

14) `பூமி தானம் () நிலக் கொடைபாவங்களைத் தொலைக்கும்.

15) `பிரப () நீர்தானம்வழிப்போக்கருக்கு தண்ணீர் பந்தல் வைத்து குடிநீர் வழங்குதல் முக்தி அளிக்கும்.

16) `மஹிஷிதானம்கறவை பெண் எருமையை அந்தணருக்குத் தானம் செய்தால் கோரிக்கை வெற்றி பெறும்.

17) `ரிஷப தானம்எருது தானம் ஏழு பிறப்பு பாவங்களையும் நீக்கும்.

18) `வித்யா தானம் () கல்விக்கான கொடைபுத்தகம், பேனா, மைக்கூடு போன்றவை தானம் செய்தால் மோக்ஷம் தரும்.

19) `ஹயபங்க்தி தானம்தங்க ஏர், நவரத்தினங்கள் புதைத்து நாற்பது மாதிரி பொன் எருதுகள் தானம் அளித்தால் ஏழு பிறப்பிலும் முக்தி தரும்.

20) `ஹிரண்ய கர்ப்ப தானம்பசித்தவர்க்கு அன்னமிட்டு, பிராமணர்களுக்குப் பொன் தினந்தோறும் தானம் செய்வது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும்.
அது,இது கிடைக்கும் என்றால் பேராசை கொண்ட இந்துவும் விடுவானா!இறைவனே அனைத்தையும் படைத்தான் என்பதனை மறந்து அவன் படைத்ததையே திருடி இறைவனுக்கு கொடுக்கும்படி [broker] பிராமணியிடம் கையளித்து திருப்தியடைகிறான்.பிராமணியும் பயனடைகிறான். இந்துக்களை ஆரிய வர்க்கம் எவ்வளவு முட் டாளாக்கி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். உணர முடிகிறதா??

                               -தொகுப்பு:கயல்விழி 
koyil, kovil thanam tharumam pusari aiyar hindu annaa periyar kadavul iraivan sivan murukan,pillaiyar amman 

No comments:

Post a Comment