குடாநாட்டில் பலாலி |
பலாலி கிராமம், வடக்கு திசையில் பாக்குநீரினையும் அதைத்தொடர்ந்து பரந்த கடல் பரப்பான வங்காளவிரிகுடாவும், கிழக்கு திசையில் வளலாய், பத்தைமேனி, அச்சுவேலியும், தென் திசை ஒட்டகபுலம், வயாவிளான். குரும்பசிட்டியும் மேற்கு திசையில் கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் பாதுகாப்பாக அமைய அவற்றின் மத்தியில் கடல் வளமும் கொண்ட தமிழர்களின் பொருளாதார மையமாகும். வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் தென்னந்தோப்புகளும் பனையடைப்புகளும் விவசாய நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் மீன்பிடி வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.
மக்கள்
பலாலி விமானநிலையம் |
ஆரம்பகாலத்தில் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் விவசாயத்தையே தமது வாழ்வு முறையாகவும், சைவத்தை தமது மதமாகவும், அனைவரும் ஒரேசமூகமாகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
பலாலியில் பிரபல்யம் பெற்ற பல மக்கள் வாழ்ந்துள்ளனர், அவர்களில் மிகவும் பிரபல்யம் அடைந்தவர்களாக யாழில் பிரசித்தி பெற்ற சித்த ஆயுள்வேத வைத்தியர் பஞ்சாசரம் ஜயா அவர்கள், விசேட முறிவு தெறிவு வைத்தியர் சமத்தர் செல்லப்பா, பிரபல கண் வைத்தியர் தியோகுப்பிளை, பிரபல மிருக வைத்தியர் அம்பலப்பிள்ளை தம்பையா, யாழ்பாணத்தின் பிரபலமான ஜோதிட நிபுணர் இந்தியா அம்மா என்று அளைக்கப்படும் திருமதி இரத்தினம் அம்மா அவர்களை குறிப்பிடலாம்.
மேலும், பலாலியில் பல கல்விமான்கள் பிறந்தும் அவர்களது பங்களிப்பு பலாலி மண்ணிற்கு கிடைக்காது போனது துர்அதிஸ்டமே. இவர்களில் பலர் வைத்திய கலாநிதிகளாகவும், பொறியியல் நிபுணர்களாகவும், கணக்காய்வாளர்களாகவும் சட்ட நிபுணர்களாகவும், ஜோதிட கலாநிதியாகவும் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் தாம் வாழ்ந்த ஊர்களில் கொடி கட்டிப்பறந்து இருக்கின்றார்கள்.
ஆலயம்
ஆரம்பத்தில் பலாலி மத்தியில் சித்தி விநாயகர் ஆலயமும் அதனைத்தொடர்ந்து பலாலி கிழக்கில் கன்னார் வயல் கண்ணகி அம்மன் ஆலயமும் அமையப்பெற்று அங்குள்ள மக்களின் பிரதிநிதியால் ஒருவரை பூசகராக நியமித்து சைவ வழிபாட்டு முறைதமிழ் பாரம்பரிய முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது.
அப்போது பூசகராக பணிவிடை செய்தவர் குருக்கள் என்ற கவுரவப்பெயருடன் தனது கடமையை செய்ததினால் தொடர்ந்தும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இப்பதவியை ஏற்று பல தலைமுறையாக வழிபாட்டு முறை தொடர்ந்து. அப்போதும் குருக்கள் முறையும் பண்டைய தமிழ் வழிபாட்டு நடைமுறையும் தொடர்ந்தும் இருந்துள்ளது. பிற்காலத்தில் மக்கள் ஆன்மீகத்தில் இருந்து சைவசமய ஆகமங்களை பின்பற்ற தொடங்கினர் அதன் பின்னரே அந்தணர்கள்மூலம் சைவசமய விதி முறைகளுக்கு அமைய வழிபாட்டுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வட மொழியான சமஸ்கிருதம் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது.
புதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயரால் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து பதினேழாம் ஆண்டு பிற்பகுதிவரை கத்தோலிக்க மதம் வேர் ஊன்றி வளர்ச்சி பெற்றது. அந்தக் காலகட்டபகுதியில் பலாலி வடபகுதி மக்கள் பலர் சைவத்தில் இருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறி தமக்கென ஓர் தேவாலயத்தையும் அமைத்தனர்.
தற்போது வடக்கில் ஆரோக்கியமாதா தேவாலயம், அந்தோனியார் தேவாலயம், அம்மன் கோயில்லும், மேற்கே சென்செபஸ்ரீயார் தேவாலயம், முலைவைப் பிள்ளையார் கோயிலும். தேற்கில் சிவன் கோயிலும், வைரவர் கோயிலும், ஒட்டகப்புலம் சென் மேரி தேவாலயமும், கிழக்கில் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், பெரியதம்பிரான், வைரவர், முதலியம், பத்திரகாளி, அண்ணமார் என பல வழிபாட்டு தலங்களின் மத்தியில் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் புகழ் பெற்ற பலாலி சித்தி விநாயகர் ஆலையமும் அமைந்து உள்ளது.
கடல் வாணிபம்
பனைவளம் |
பலாலியின் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்திருப்பதால் அவை அழிப்பேரலையிலிருந்து தப்பி இருந்தன. இங்கிருந்தவர்கள் தொடர்ந்தும் விவசயத்தை பெற்கொண்டிருந்தனர். வடபகுதி மக்களும் ஏனைய பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் தங்களது அண்றாட வாழ்க்கைமுறையை சுமூகமாக கொண்டு செல்லும் நோக்குடன் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தினர். இம்முறையானது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவை நடைமுறையில் இருந்தது.
இங்கு வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வுமுறைக்கு ஏப பல மாற்றங்களை தமது சமூகத்தின் மத்தியில் கொண்டுவந்தனர், இலங்கையின் வடபகுதி மக்களின் தொழில் ரீதியான சமுதாய கட்டமைப்பை பலாலி மக்களுக்கு பின்பற்றினர்.
ஆசிரியர் பயிற்சி கலாசாலை
பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை மிகவும் முக்கியம் வாய்ந்த ஓர் கல்வி போதனாசாலையாகும். இது பலாலி விமானநிலையத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல விதமான கல்வி துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு இலங்கை முழுவதுக்குமான தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன்முலம் பலாலி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
பொருளாதாரம்
பலாலி மக்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினர். மிளகாய், வெங்காயம், தக்காளி, புகையிலை, கோவா, திராட்சை என பல வகையான மரக்கறி வகையையும் தானிய பெருட்களையும் உற்பத்தி செய்து தன்ணிறைவு கண்டனர். உள்ஊரிலும், யாழ்பாண குடா நாட்டிலும் சந்தைப்படுதி கொண்டிருந்த பலாலி விவசாயிகள் நாட்டின் தென்பகுதிக்கு படையெடுத்தனர். நேராகவே கொழும்பு புறக்கோட்டையில் உள்ள நாலாம் குறுக்கு தெருவில் அமைந்த வியாபார நிலையங்களில் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்தி வெற்றியும் கண்டனர்.
தொகுப்பு:கயல்விழி
0 comments:
Post a Comment