ஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்[2017]




இத்திருநாளினை சூரனை [பயங்கரவாதியாக] அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர்  கொன்றொழித்து அதனை தமிழர் தெய்வமாம் முருகன் மேல் பழியினை போட் ட கதையாகவோ அல்லது வட  நாட் டவர் கூறுவதுபோல்  இராவணனை அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர்  கொன்றொழித்த நாளாகவோ அது கொண்டாடப்பட்டு வருவதினாலேயே நாம் அதனை மறுக்கிறோம்,வெறுக்கிறோம்.
இக்கதைகள் தீபாவளிக்குள்  திணிக்கப்படும்வரை தீப ஒளி ஏற்றும் விழாவாகவே தமிழரிடம் வழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம்...
தீபாவளி ஒவ்வொரு மனிதனும் தம்மிடம் கண்டறியப்படட துர்க்குணங்களை  அழித்து நன் மனிதர்களாக வாழ முடிவெடுக்கவேண்டிய ஒரு நாளாகும்.
அதனை விடுத்து ,  தன்  இனத்தினை  அழித்ததனை பெருவிழா எடுத்து சூரன் போர் என்றும்,இராவண வதம்  என்றும் கொண்டாடும் வழமை உலகில் தமிழர் எனும் இனத்தில் மட்டுமே காணலாம்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும் என்னும் பழமொழி இன்று தமிழர் மத்தியில் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகவே அமைந்து விட்டது.
காலம் கெட்டுவிட்டது!!!
                                                                                         deebam 


1 comments:

  1. அருணாசலம் ஆறுமுகம்Monday, October 16, 2017

    தலைவர் பிரபாகரனை கொன்ற மகிந்தாவை வணங்கி அந்த நாளினை கொண்டாட நற்பலன் கூடி வரும் என்று பிராமணர் கூறினால் அத்தனையும் தமிழர்கள் கொண்டாட த் தயங்க மாடடார்கள்.

    ReplyDelete