பாரதி கண்ட புதுமை
பெண்ணை பாராட்டி வாழ்த்துவோம் வாரீர்
சமூகத்தை அடிமை படுத்தும்
மூட நம்பிக்கை விழுமியங்களில் விழுந்து விடாமல்
சுய சிந்தனைக்கு வடிவம் கொடுத்து
பாரதி கண்ட பெண்ணாக உயர
வளர்த்திட வாரீர்!
யார் வந்து காதல் வலை வீசினாலும்
விழுந்திடுவோம்
ஆனால் எமை அடிமை கொள்ள நினைத்தால்
கொன்றுவிடுவோம்!
காதல் வேசம் போட்டு எமை
காம இச்சையில் வீழ்த்தும்
கயவர்களை அழித்துவிட
பாரதி கண்ட புதுமை பெண்ணாக
பொங்கி எழுவோம் வாரீர்!
சமூகத்துக்கு வெளிச்சம் கொடுக்கும்
சுடராக ஒளிர்ந்திடுவோம்
எம்மை இழிவு படுத்தி
அணைக்க நினைத்தால்
சுட்டு எரித்திடுவோம்!
ஆண் காலில் வீழ்ந்து விடாமல்
அவன் துணை இன்றி
சாதித்து சரித்திரம் படைப்பாய் எனின்
நீ பாரதி கண்ட புதுமை ப்பெண் ஆவாய்
காலையடி அகிலன்
No comments:
Post a Comment