கதிரவனை மறைத்து
நள்ளிரவு நந்தவனமே ஓடி வா
அன்பு கொண்டு அணைக்க
நிலையாக வந்து விடு
உன் முகத்தை கண்டு உன்னிடம்
ஆயிரம் கதை சொல்லிடவே
சொன்னால்தானே
சோகமும் நினைவு இழந்து போகும்
நள்ளிரவு நந்தவனமே
நீ வந்தால் தானே
மனமும் அமைதி அடைந்து
ஓட்டம் சலிப்பு என
கழிந்த காலத்தைக்
களைய வைக்கிறாய்
நள்ளிரவு நந்தவனமே
உன் மடி கிடைத்தால்தானே
வெறுமை இன்றி
விழிகளும் முடிகொள்கிறது
நள்ளிரவு நந்தவனமே என்னோடு
நிலையாக இருந்துவிடு
ஆயிரம் உறவுகள் இருந்தும்
யாரும் கொடுக்க முடியாத
சுகத்தை நீ தருகிறாய்
சுமக்க முடியாப் பாரத்தையும்
நீ சுமந்து செல்வதாலே
எம் மன பாரமும்
குறைந்து ஆறுதல் அடைகின்றதே!
காலையடி,அகிலன்
No comments:
Post a Comment