கண் மூடி தூங்க நேரம் இல்லை
புலம் பெயர் மண்ணில்
சொந்த மண்ணை விட்டு வந்ததால்
உறவுகளோடு சேர்ந்து பொழுதை கழிக்க
நேரம் இன்றி
உறவுகளை வாழ வைப்பதற்காக
வாழ்வை தொலைத்து
வாழ்க்கை வாழாமலே கரைக்கிறோம்
கனவு காண்பதற்கும் நேரம் இல்லை
உறவுகளுடன் அன்பை பேண நேரம் இல்லை
ஆறுதல் சொல்லிட நேரம் இல்லை
ஓய்வெடுக்கவும் நேரம் இல்லை என்று
அலைபேசியுடன் உறவை முடிக்கின்றோம்
வீடு வாங்கும் ஆசை வந்த உடன்
கடனில் வீட்டை வாங்கி விடுவோம்
வாங்கிய கடனை அடைத்த்திடவே
வாங்கிய வீட்டில் இருக்காமல்
நேரம் இன்றி வேலைக்காக வாழ்கிறோம்
கொண்டாட்டம் வந்தவுடன்
ஆடம்பர சடங்கு செய்ய
கடன் வாங்கி கொடுக்கிறோம்
களி கொண்டாட்டம்
முடிந்த வுடன்
முகமலர்ச்சி இன்றி
கடன் அடைக்க ஓடுகிறோம்
அகிலன் தமிழன்
No comments:
Post a Comment