ஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் புரட்டாதித் திங்கள் வணக்கம்.
                                                                         கொண்டு இருக்கிறார்கள்.
ஆன்மீகம் போன்ற போர்வை  போர்த்துக்கொண்ட பசுத்தோல் போர்த்த புலிகள் பல  தோன்றி  அப்பாவிகளை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையினை சூறையாடும் ஆசாமிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியில் இறந்து கொண்டிருக்க மனிதத்தினை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பாலாபிஷேகம்  என்ற ஆரியக்கூத்துக்காக  கடவுள் என்ற பெயரிலும், திரைப்பட நடிகர் ''கட்அவுட்'' இலும்  பெருமளவு பால் வீணாக்கப்படுகிறது . 
இரத்த உறவுகள் அவ் உறவினை மதித்து ஒருவருடன் ஒருவர் பழகுவது அருகி வருகிறது. உறவுகள் என்று கூற வேண்டிய  மனிதர்கள்  ''பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்''அவர்கள் செயல்பாடுகள்மேலோங்கி நிற்கின்றன.
அப்படியாயின் மனிதம் மரணித்துவிட் டதா?. காலம் தான் பதில் கூற வேண்டும்.
                                                                                                                              

மேலும்,
தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
பாடல்
நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
* அரசியல் பேசும்  ‘’சண்டியன் சரவணை "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின்
புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்                                                                        
அகிலன் தமிழனின் கவிதைகள்,கதைகள்
 கயல்விழியின் தொகுப்புக்கள்,
என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
புதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே  வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்
 மீள வெளியாகின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய
 நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:-  s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click http://tamil.changathi.com/ then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி [listening] 

www.theebam.com



இவன் மனிதனா?மிருகமா?-சிரிக்க!!

கால்நடை மருத்துவரைப் பார்க்கலாமே?



ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்தப் பயனுமில்லை, அவர் நோயும் குணமாகவில்லை.என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, நீங்கள் ஏன் ஒரு கால்நடை மருத்துவரைப் பார்க்கக் கூடாது என்று கேட்டாள்.
அதிர்ச்சி அடைந்த கணவன், உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா? என்று கேட்டார்.
எனக்கொன்றும் கெட்டுப் போகவில்லை, உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு என்றாள் அவர் மனைவி.

அவள் தொடர்ந்து, அதிகாலையிலேயே கோழி மாதிரி எழுந்து, அப்புறம் காக்கா மாதிரி குளித்துவிட்டு, குரங்கு மாதிரி வேகவேகமாகச் சாப்பிட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக அலுவகலத்துக்கு ஓடி, அங்கே மாடு மாதிரி உழைத்து விட்டு, அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவர்களிடம் கரடி மாதிரி கத்திவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்ததும் வீட்டிலிருப்பவர்களிடம் நாய் மாதிரி கத்தறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க... அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை மருத்துவர்தான் குணப்படுத்த முடியும் என்றாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் கணவன் விழிக்க,
"என்ன[ஆந்தை]கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்றாளே அவள் பாருங்கள்.
                                                         

நேரம் இல்லை


ஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''

ஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.

வள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.

ஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் ,முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.

அதன்படி, நான்கு கோடிp பாடல்கள் இயற்றினால் அவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்தான். நாலு கோடிப்பாடல்களை எவரால் பாடுதற்கு இயலும் ! பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே ! அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.

ஓளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலு கோடிப் பாடல்களைப் பாடுவதாகத் தெரிவித்தார்..பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்துவிட்டது.

போலி வள்ளல் திகைத்தான். ஓளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், “எவ்வளவு காலம் ஆகும்? அதுவரை அவர் எப்படிப் பாடுவார்? அதையும்தான் பார்ப்போமேஎன்று கருதி இசைந்தான்.

புலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்.

ஒருகோடி 
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

இருகோடி 
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

உண்ணீர் உண்ணீர்என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்என்பதும் பாடம்.)

மூன்றுகோடி 
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

நாலுகோடி 
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.


இது நாலு கோடிப் பாடல்கள் அல்லஎன்றான் அவன் நாலு கோடிப்பாடல்கள்தான் என்று அந்த அவை கூறிற்று..அவன் மிக வருத்தத்துடன்  ஆயிரம்பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத்தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.