எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:03

சிந்து வெளி எழுத்துக்கள் எமக்கு எடுத்துக் காட்டுவது ,அவர்கள் கல்வியறிவு கொண்டவர்கள் என்பதும்,மேலும் அவர்கள் பேசிய மொழி திராவிடம் அல்லது பழைய தமிழ் என்பதும் ஆகும். திராவிடம் என்பது, தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு ஆகும். மேலும் திராவிடம் என்பது அம்மக்களின் மொழியையும் பொதுவாக குறிப்பிடுகின்றது. திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தி யாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப் படக் கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும் பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, அங்கு மேற் கொண்ட விரிவான ஆய்வுகள், சிந்து வெளி எழுத்துக்கள், இந்தோ-ஆரியன் மொழியை  [Indo-Aryan language] எழுத பாவிக்கப் பட வில்லை என்பதும் ஆகும், ஏனென்றால், ஆரியன் கி மு 1600 -1700 வரை இந்தியாவில் எங்கும் இருக்கவில்லை.

திராவிடர்கள் அல்லது தமிழர்கள் தமக்கு என சொந்தமாக, பாரம்பரிய மாக எழுத்து வைத்திருந்தார்கள். இவர்கள் சிந்து வெளிக்கு எழுத்தை அறிமுகப் படுத்திய துடன், அதை தொடர்ந்து தென் இந்தியாவில் மட்பாண்ட ங்களிலும் முத்திரைக் காசு களிலும் [pottery and punch-marked coins] பாவித்தார்கள். இவை எல்லா வற்றிற்கும் , கி மு 600 முற்பட்ட தென் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்ட எழுத்துக்கள் சான்று பகிர்கின்றன.சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகள் அல்லது வில்லைகள் ,உண்மையில் எழுத்தை படிப்பதற்க் கான ஒரு வெவ்வேறு எழுத்து முறைமை களை காட்டும் காட்சி அட்டைகள் [‘flash cards’] என அறிஞர்கள் வாதாடுகிறார்கள். பராஹவி மொழி (Brahui language) அல்லது பிராகுயி மொழி பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தில்,அன்றைய ஒரு சிந்து வெளி பகுதியில், இன்றும் பேசப்படும் ஒரு மொழியாகும். இது திராவிட மொழிக் குடும்பத்தில் வட திராவிடப் பிரிவைச் சேர்ந்த ஒரு மொழியாகும். பொதுவாக பராஹவி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்து ஆரியக் குடியேற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரு மொழியின் எச்சமாகக் கருதப்படுகிறது. மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பராஹவி இருந்திருக்கலாம் என்றும் கணிக்கப்படுகின்றது. இவை எல்லாம் சிந்து வெளி மக்கள் திராவிட மொழி ஒன்றை பேசினார்கள் என்பதை உறுதிப் படுத்து கின்றன. பொதுவாக அறிஞர்களால் வைக்கப்படும் கருதுகோள் என்ன வென்றால், திராவிட மக்கள் அல்லது முன்னைய தமிழர்கள் ஆப்ரிக்காவில் தோன்றி னார்கள் என்பதாகும் .இவர்களை , முதனிலைத் சகாரான் [ Proto-Saharan] என பொதுவாக அழைப்பார்கள். இவர்களே, ஈலமைட்டு மக்களுக்கும், சுமேரியா மக்களுக்கும்  [Elamite and Sumerian people] முன்னோர்க ளும் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஒரு பொதுவான எழுத்து முறைமையை தங்களுக்குள் பகிர்ந்துள்ள துடன் , அவை முதலில் மட்பாண்ட ங்களில் தோன்றி, பின் அசையெழுத்து முறை (syllabic) யாக பரிணாமித்தன. 

கி மு நாலாம், மூன்றாம் ஆயிரம் ஆண்டுகளில் ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருந்து ஈரான் வரையும் மற்றும் சீனா,சிந்து வெளி பகுதிகளில் [from Saharan Africa to Iran, China and the Indus Valley] ஒரு பொதுவான பதிவு பேணல் அமைப்பு [a common system of record-keeping] ஒன்று இருந்தமை அறியப் படுகிறது. ஈலமைட்டு மக்களும் சுமேரிய மக்களும் ஆப்பு வடிவ எழுத்து முறைமைக்கு ஆதரவாக, இதை பின் கை விட்டாலும், திராவிடர்கள், மினோவன் [Minoans ] மற்றும் மாண்டே [Mande] தொடர்ந்து முதனிலைத் சகாரான் எழுத்து வடிவத்தை [Proto-Saharan script] பாவித்தா ர்கள். மேலும் சுமேரியன்,ஈலமைட்டு,திராவிடம் மற்றும் மாண்டே மொழிகள் மரபியல் தொடர்புடையன [genetically related] ஆகும் எனவும் டாக்டர் கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ் [Dr  Clyde Winters] தமது ஆய்வு கட்டுரையில் விபரமாக வெளியிட்டு உள்ளார்.

பன்மொழிப் புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.போன்றோர் இதில் பல ஆய்வுகள் / முயற்சிகள் செய்துள்ளார்கள். பேராசிரியர் ஆ. சதாசிவம் மற்றும் முனைவர் கி.லோகநாதன் போன்றோர்கள் சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழி ஒரு திராவிட மொழி அல்லது பழைய தமிழ் என நிறுவினார்கள். உதாரணமாக, முனைவர் கி. லோகநாதன் முத்தராயன் [Dr.K.Loganathan Muttarayan] , சுமேரியன் திராவிட மொழிகளுக்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பை ஆதார பூர்வமாக காட்ட ,  நூற்றுக் கணக்கான  சொற்பொருள் பொருத்த ங்கள் மற்றும் வேறு மொழியியல் தரவுகள் [lexical correspondences and other linguistic data] போன்ற வற்றை சுட்டிக் காட்டியுள்ளார். டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர் மெசொப்பொத்தே மியாவிற்கு திராவிடர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தார்கள் என்கிறார். அதே நேரம் வேறு அறிஞர்கள் திராவிடர்கள் தமது முன்னைய குடியிருப்பான மத்தியத்தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா புலம் பெயர்ந்தார்கள் என்கிறார்கள். KP பத்மநாபா மேனன் திராவிடர்-சுமேரியர்களின் நெருங்கிய தொடர்புகளைப் பற்றி எழுதியுள்ளார்.  இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், நீதிபதி, வரலாற்றாசிரியரும் ஆவார்.பல கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் [Orientalists] சுமேரியர்கள் தொடக்க கால திரா விடர்கள் அல்லது தமிழர்கள் என்பதை ஓத்துக் கொள்கிறார்கள். இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்க வரான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி அவர்கள் கோயில் வழிபாட்டில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக்காட்டியுள்ளார். உதாரணமாக," ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய,ஈனன்னாவை போற்றி துதி பாடும்,ஈனன்னை சீர்பியத்தில் [ஈனன்னா B][exaltation of Inana (Inana B)],பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME "[divine authority] "மெய்" பற்றி கூறப்பட்டுள்ளது என அதை தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார் முனைவர் கி. லோகநாதன்.

"அனைத்து சக்தி அன்னை,தெள்ளிய ஒளி வடிவினள்
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; 
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை;சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்;உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]
என் அன்னையே,பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசமாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"

இது தான் அந்த குறிப்பிட்ட முழுப் பாடலாகும்.இதை வாசிக்கும் போதே சைவத்திற்கும் சுமேரியன் சமயத்திற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரிந்து இருக்கும்! அதே போல,தொல்பொருள் ஆய்வியல் அறிஞர்கள் சர். ஜான் மார்ஷல் (Sir John Marshall), சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler), ஹிராஸ் பாதிரியார் (Father Heros), டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall), ஐராவதம் மகாதேவன் [Iravatham Mahadevan],டாக்டர் அஸ்கோ பார்போலா [Asko Parpola] போன்றவர்கள் சிந்து வெளி பற்றிய, தங்கள் ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். சிந்துவெளி நாகரிகத் தைத் தமிழர் நாகரிகம் என்று கூறுவதற்கு அங்கு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும், வெளிப்பட்ட கட்டிட அமைப்பும், பயன் படுத்திய நாணயங்களும் மேலும் சான்றாக அமைந்துள்ளன என்று பல தகுந்த சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன்,ரஷ்ய நிபுணர்  யூரி வெலன்டினோவிச் க்நோரோசாவ் [Yuri Valentinovich Knorozov,]  தலைமையில்லான உருசியா [Russia/ரஷ்யா] சிந்து வெளி ஆய்வு குழுவும் அங்கு பேசப்பட்டது பழைய திராவிட மொழி [older Dravidian] என ஆலோசனை வழங்கி உள்ளது. டாக்டர் கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ் [Dr Clyde Winters/Ph.D Uthman dan Fodio  Institute, Chicago, IL 60643] தமது "சிந்து எழுத்தின் மொழி திராவிடம்" ["Dravidian is the language of the Indus writing"], என்ற CURRENT SCIENCE, VOL. 103, NO. 10, 25 நவம்பர் [NOVEMBER] 2012 இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். இவை எல்லாம் சுமேரிய மொழி போல,சிந்து வெளி மொழியும் திராவிட மொழியுடன் குறிப்பாக பழைய தமிழுடன் நெருங்கிய தொடர்பு உள்ளன என்பதை காட்டுகிறது.மேலும்  ஹரப்பா முத்திரைகள் பொதுவாக அதன் உரிமையாளர்க ளின் பெயரையோ தலைப்பையோ பதிய வில்லை .அவை பொதுவாக தாயத்துவாக இருப்பதுடன், ஆண்டவனின் அருள் பெற ,அவருக்கு எழுதும் குறுகிய விண்ணப்பமாக இருக்கின்றன. இது சுமேரியர்களின் நிர்வாக மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கான [administrative and commercial purposes] நீண்ட பதிவுகளில் இருந்து முற்றாக வேறுபடுகின்றன.

பொதுவாக ஹரப்பா முத்திரைகள் தேய்ந்து போன நிலையிலேயே கண்டு எடுக்கப் பட்டு உள்ளன. மேலும் அவை அநேகமாக துளையிடப் பட்டு காணப் படுகின்றன. ஆகவே இது நூல் ஒன்றினால் கோர்க்கப் பட்டு கழுத்திலோ அல்லது இடைவாரிலோ [belts]  தொங்க விடப் பட்டு இருக்கலாம் என ஊகிக்கலாம். திராவிடர்கள் தமது குலமரபுச்சின்னம் [totems] அணியும் பழக்கம் - பொதுவாக பொதுமக்களிடை மதிப்பு பெற்ற பழக்கம்- என்பது இதை மேலும் உறுதிப் படுத்து கிறது .உதாரணமாக சங்க காலத்தில்,போர் வீரர்களும் மணமாகாத இளம் பெண் களும் இப்படியான ஒன்றை அணிந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தென் இந்தியா பண்டைய  மட்பாண்ட சுவற்றில் எழுதப்பட்டவை [graffiti /கிராஃபிட்டி ] ஹரப்பா குறியில் உள்ளது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருது கிறார்கள். மேலும் இவை பிராமி [Brahmi] எழுத்துக்களுடன் ஒத்து போவ தாகவும் கருது கிறார்கள். இது ஹரப்பா எழுத்து, பின் தமிழ்-பிராமி அல்லது தமிழி  எழுத்தாக,ஒரு தொடர்ச்சியில் சீராக நீடிப்பதை காட்டு கிறது. இந்தியாவில் கண்டு எடுக்கப் பட்ட  கி மு 300  ஆண்டு தொடக்கி கி பி 700 ஆண்டு வரையான முத்திரைகள், பல விலங்குகளை சித்தரித்து இருப்பதுடன், அவையின் மேல் சிந்து வெளி முத்திரை போலவே, எழுத்து செதுக்கி பொறிக்கப் பட்டு உள்ளதுடன், அந்த உரிமையாளரின் மத கருத்துக்களையும்  எடுத்துக் காட்டுகிறது.
                            
பொதுவாக,எழுத்து நாகரிகத்தின் உச்சமாக கருதப் படுகிறது. இது கருத்துப்பரிமாற்ற த்தை அல்லது தொடர்பை விரிவு படுத்தவும், பதிவுகளை வைத்திருக்கவும் மற்றும் எண்ணங்களை மறு மதிப்பீடு செய்யவும் உதவுவதுடன், மேலும் தனது வாழ் நாளிற்குப் பிறகும் வாழவும், தொலைவான எதிர்காலத்திலும் [distant future] பேசவும் வழி வகுக்கிறது. அண்மைய தொல்பொருள் ஆய்வுகள், எழுத்து முதல் முதலாக  மெசொப்பொத்தே மியாவிலும் அதை சுற்றியும் விருத்தி அடைந்ததாக சுட்டிக் காட்டுகிறது. இது,நாம் முன்பு கூறியவாறு, சிந்து வெளி ,திராவிட மொழிகளுடன், குறிப்பாக பழைய தமிழுடன், நெருங்கிய  தொடர்பு உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. எப்படியாயினும் பண்டைய பாரம்பரிய த்தின் படி, எழுத்து தனிப்பட்ட ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டதாகவோ அல்லது கடவுளர்களால் மனிதகுலத்திற்கு ஒப்படைக்கப்பட்ட தாகவோ கருதப் படுகிறது. எனினும் எழுத்தின் வளர்ச்சி ஒரு படிப்படியாக,பல நூற்றாண்டுகள் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒன்றாகும் என்பது இன்று எமக்கு ப்புரியக்கூடியதாக உள்ளது!  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:04  தொடரும்

1 comment:

  1. தற்போது நாம் பேசும் தமிழ் கூட பல மொழிகளைக் கலந்தே பேசுகிறோம்.

    ReplyDelete