தொழில்நுட்பம்:- வருங்காலதொலைநோக்கு,------------(பகுதி:01)

இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது எனது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)

௦0.10  முகப்பு:
வணக்கம்.  நான் பலவிதமான தொழில்நுட்ப விடயங்களிஸ் ஆர்வம் உடையவன். என் பொதுவான சம்பாஷனைகளில் இனி வருங்காலத்தில் மனிதகுலத்தில்  நடக்ககூடிய சில நம்பமுடியாத கற்பனை செய்ய முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத பலவிதமான தொழில்நுட்ப கொள்கைகளையும், தத்துவங்களையும் உமிழ்வது வழக்கம். இவைகள் எல்லாம் வரும் 500 வருடங்களில் கட்டாயம் நடக்கும் என்பது  என்னுடைய   அசைக்க யாத வாதம். தற்காலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் பெரும்பாலும் அரைத்த மாவை அரைப்பதாகவே தோன்றுகின்றன.  நான் ஒரு வித்தியாசமான முறையில் புதிய ஒரு கோணத்தில் பகுத்தறிவுடன்  ஆராய்ந்து எழுதும் இவ்வாக்கம் ஆவணப்படுத்தி வைத்தால் பிற்கால சந்ததியினர் எனது தொழில்நுட்ப ஜோசியம் சரியென  உணரும்போது எனது கற்பனைத் திறனை வியக்க மாட்டார்களா என்ன?

நான் ஒரு விஞ்ஞானி அல்ல. என்னுள் இருக்கும் சில உணர்வுகள், மனிதர் தற்சமயம் இயற்கை, வழக்கம் என்று எண்ணியிருக்கும் பல கொள்கைகளை உடைத்து எறிந்து, அறிவுபூர்வ அணுகுமுறையுடன் சிந்தனை செய்து புதிய பல 'இயற்கை','வழக்கம்'போன்ற விடயங்களை உங்களுடன் பகிர முனைந்தேன். இயற்கை என்று சொல்லப்படும்போது அது ஒரு பூமியைச் சார்ந்த மனிதனின்  சார்பான ஒரு சொல்லாகும். ஆனால் வேற்றுலக உயிர்களுக்கோ வருங்கால மனிதனுக்கோ இயற்கை என்றல் முற்றாக வேறு கருத்துடையதாக இருக்கும். இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் இவனுக்குப் பைத்தியம் என்றும் நகைக்கக் கூடும். பரவாய் இல்லை. இப்படிப் பல தத்துவ ஞானிகள்கூட ஏற்கனவே பெயர் எடுத்து விட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியை நம்புவோர் இதை மிக வியப்புடனும், மற்றயோர் இதை ஒரு கற்பனை நாவல் என்றும் எடுதுக்கொள்ளட்டுமே!

௦0.20  புகுமுன்:
இந்த தொழில்நுட்ப அலசல் முக்கியமான ஆறு பகுதிகளைக் கொண்டு இருக்கும்.
1. சக்தி ஆக்கம்
2. வாகனம் - பொழுதுபோக்கு 
3. சுற்றாடல் - இயற்கை - உணவு - வீடமைப்பு
4. மனித அறிவாண்மை
5. அண்டவெளி
6 . தெய்வ நம்பிக்கை   

இந்த அறிவுடை தொலை நோக்கல் இப்போது இருக்கும் சாதனங்களை விளங்கப்படுத்தவோ அல்லது இனி சொல்லப்போகும் விடயங்களை ஆய்வு செய்யும் நிறுவல் கொள்கைகளையோ நிச்சயமாகக் கொண்டு இருக்காது. ஏனென்றல், தற்போதைய மனிதனின் அறிவு அவற்றைக் கிரகித்து, விளங்கி, நிறுவும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.


இவையெல்லாம் இனி நடக்கும் என்று நான் நினைப்பவற்றில் ஒரு சில பகுதியே ஆகும். 
[2010 இல் தீபத்தில் வெளிவந்த கட்டுரை.]
--ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன் -----------------  தொடரும்

No comments:

Post a Comment