அம்மாவின் கை [அகிலன்]

Image result for அம்மாவின் கை

மனம் உலகை வெறுத்தாலும்
ஆறுதல் தந்து அன்பு வீசும் கையாக
வாழ்நாள் முழுதும் வருபவள் அம்மாவே

தேய்பிறையாக மறைந்து போகாமல் இருக்க
வளர்த்து விட துணை தரும்
கையாக வருபவளும் அவளே

மலர்களை அழகாக்கும் வேர்கள்
மண்ணில் புதையுண்டு இருப்பது போல
என்னை மலர் போல வாழ வைத்து
என் இனிமையில் தன் உணர்வை புதைத்து
கையை கொடுப்பதும் அம்மாவே

எம்மை புரிந்து நாம் காணும்க
னவுகளை வென்று விட
இறைவனுடன் வரம் கேட்டு
பிராத்தனை செய்யும்
அவள் கையை போல
வையகத்தில் உண்டோ

துன்பத்தில் விழுந்து விடாமல்
காந்தம் போல பாசம் கொண்டு
எம்மை இறுக்கி பிடிக்கும்
கையாக வாழ்நாள் முழுதும்
இருப்பவள் அம்மா.
--அகிலன்,தமிழன்--

No comments:

Post a Comment