தெய்வம் எங்கே?-சித்தர் சிவவாக்கியர்


சிந்தனைக்கு:இந்த சமுதாயமே அறிந்த ஒரு குற்றவாளி கோயிலுக்கு சென்றான்.
ஆனால் கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
கோவிலின் வெளியே நின்றபடி கடவுளை வேண்டினான்.
"கடவுளே நான் குற்றவாளி, என்ற காரணத்தால் உன்னை தரிசிக்க விடமறுக்கிறீர்கள்  என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
உடனே ஒரு குரல் ஒலித்தது ''அதற்காக ஏன் கவலைபடுகிறாய்.
அவர்கள்,என்னையே உள்ளே அனுமதிப்பது இல்லை'' என்று கடவுள் கூறினர்.        
சிவவாக்கியர்
சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?
"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.



அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?
"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடவுள் உள்ளே இருக்கிறான் :

கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார்.


               ””””ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
                      நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
                      வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
                      கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே””
                                                                         -----------சிவவாக்கியர்-----

நமது உடலில் சோதி வடிவமாக உள்ள இறைவனை நமது உடலில் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியாமல் அவனை அடையக் கூடிய வழி புரியாமல் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்து நமது பிராணனை ஓட விட்டு சோதி வடிவமாக உள்ள இறைவனை அடைய முடியாமல் நாட்களை கழித்து மனம் வாடி இறந்து போன மனிதர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாத கோடி என்கிறார் சிவவாக்கியார் .

நமது உடலில் கடவுள் இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களே கோடி கணக்கில் என்றால் கடவுளை வெளியே தேடி அலைந்து கொண்டிருப்பவர்களை எண்ணிக்கையில் கூற முடியாது என்று சிவவாக்கியர் மனம் வருந்தி பாடுகிறார் .

கடவுள் வெளியே ………

கடவுள் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களைப் பற்றி பாடிய சிவவாக்கியர் கடவுளை வெளியே தேடி அலையும் மனிதர்களைப் பற்றி மிகவும் கோபாவேசமாகப் பாடுகிறார்.

                          நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாற்றியே
                          சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
                          நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
                          சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ””
                            -- சிவவாக்கியர்
ஒரு கல்லை நட்டு அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு பூக்களை அதற்கு சூட்டி அந்த கல்லை சுற்றி சுற்றி வந்து தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக அந்த கல்லை எந்த தெய்வம் என்று நினைக்கிறார்களோ ,

அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சாடணம் செய்து தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல்லுக்குள் இருக்கும் கடவுள் உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுமா என்கிறார.

மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு ,ரசம் ,பொறியல் போன்றவற்றின் சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப் படும் சட்டி எப்படி அறியாதோ

அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல்லும் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார்.

கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை வெளியே தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் முட்டாள்தனமான முறைகளின் மூலம் கடவுளை வணங்குகிறவர்களின் செய்கைகளைத் தான் சிவவாக்கியர் கண்டிக்கிறார்.
        ------- அனுப்பியவர்:- P.சுந்தரமூர்த்தி   -------

1 comment:

  1. பரந்தாமன்Wednesday, September 19, 2012

    உண்மைதான்.கடவுள் இல்லாத ஆலயத்திற்காக அள்ளி,அள்ளி பணத்தை இறைத்து ஒரு சிலரின் பணப் பையை அல்லவா நிரப்பி ஏமாறுகிறார்கள்.

    ReplyDelete