அடுத்தவன் வாழ்வு போல
என்னுடைய வாழ்வு ஒன்றாவதில்லை
என்பதை அறியாமல்
வாழும் வாழ்க்கையில் தெளிவின்றி
அடுத்தவன் பாதையில்
பயணம் செய்ய ஆசை கொண்டு
இடைஞ்சல்களை சந்திக்கும் போது
அக்கரை நோக்கி அலைபாய்கிறதே மனம்!
இருக்கின்ற கிராமிய வாழ்வில்
மனம் ஆசை கொள்வதை விட்டு விட்டு
கற்பனையில் வரும் வெளிநாட்டு ஆசையில்
மனம் காதல் கொண்டு
அக்கரையை நோக்கி அலைப்பாய்ந்து
அக் கரை சென்றதும்
திருப்தி இன்றி
இக்கரை நோக்கி அலைபாயுமே!
ஆரோக்கிய நிலையில்ப
ணத்தை நோக்கி ஓடி
வசதியை பெருகிட
எண்ணம் கொள்வோம்
வசதி வந்தவுடன்
ஆரோக்கியத்துக்காக
அக்கரை யை நோக்குவோம்!
காலையடி,அகிலன்
No comments:
Post a Comment