1.முத்தம்
மலர் கொடுக்கும் தேனால்
மனமகிழ்ந்து
மலர் மீது முத்தம் இட்டு நிக்கிறது
வண்ணத்துப்பூச்சி!
2.வாழ்வோம்
பிறவி கடவுள் தந்த கொடை
இந்தநிமிடம் என்பது வரம்
மகிழ்வை உண்டாக்கி
வாழ்வோம்
நாளை விடியும்
என்ற நம்பிக்கையில்!
03 தேய்பிறை
பிறவி ப்பயன் புரியாமல்
பண மாயையில் சிக்குண்டு
நித்தம் பேராசை வளர்த்து
வாழ்வை தேய்பிறையாக்குறோம்!
04.முதல் காதல்
கானல் என அறியா பருவத்தில்
என் உயிர் என வந்தவளே
உன்னோடு சேர முன்பே
கனவு போல கலைந்தது ஏனோ!
05.வறுமை
வான வீதியில்
செல்லும் மேகமே நீ
விழி திறந்து கண்ணீர் செறிந்தால்
கருகி போகும் பயிர்கள் உயிர்ப்பு அடைந்து
விவசாயின் வறுமையும் அழிந்துவிடும்!
06..உறவு
நெஞ்சை அன்பினில் நீந்தி அதில்
நேர்மையாக இருந்தால்
அருமையான உறவு
நிலைத்து நிற்கும்
இல்லையெனில்
அது தொலைந்துவிடும்!
07..இயற்கை
ஒளி நிலாவும்
கண்விழி திறந்து
எட்டி பார்க்கிறாள்
இருள் மூடிய
இயற்கையினை!
08..மகிழ்வு
செழிப்பு அடைய உழைத்தேன்
பலன் வந்தது
இதனை கண்டு உறவுகளும்
முகம் மகிழ
நண்பர்கள் அரவணைத்து வாழ்த்த
முகம் மலர்ந்து
செழிப்புக் கொண்டேன்!
09.மழை
செழிப்படைய மழை
உதவி செய்யவில்லை எனில்
உலகுக்கு எப்படி உணவு கிடைக்கும்
மழை தரையை நனைக்கும் போதே
விவசாயி உணவை உலகிற்கு கொடுக்கிறான்!
10..சிந்தனை
ஞானம் வந்து இருந்தால்
நேசிக்க முன்பு
யோசித்திருப்பேன் ஆனால்
இன்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
ஏன் அவளை நேசித்தேன் என!
ஆக்கம்:அகிலன்,தமிழன்-காலையடி
0 comments:
Post a Comment