சிவகார்த்திகேயனின் ''வேலைக்காரன்''

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிவகார்திகேயனை மையப்படுத்தி வெளியானது. அதன் பின்னர் பகத் பாசிலின்  பிறந்த நாளன்று அவரை மையப்படுத்தி போஸ்டர் வெளியானது.

தற்போது நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் உள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டீஸர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இந்த படத்தை 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
தகவல்:கயல்விழி    

No comments:

Post a Comment