உன் தனிமை வாழ்வுக்கு புது சுகம் கிடைத்து
காதல் என்ற தேனும் உன் மனம் முழுதும் ஓடும்
வாழ்வும் அர்த்தம் உள்ளதாக தோன்றும் இதனால்
உன் மனம் எதிர்பார்ப்புகளை நோக்கி அலை பாய்ந்து
கற்பனை என்ற சிறகில் சிறகடித்து பறப்பாய்..
அங்கே உன்னையே உன்னில் மறைத்து
உலகத்தையே உன் கைவசம் ஆக்கி
குழந்தைகள் அடையும் இன்பம் போல
உன் உள்ளம் இன்பம் அடையும் காதலித்து பார்
அவள் பேசும் சொல்
உன் காதுகளில் சங்கீதமாய் ஒலிக்கும்
நரண்புகளும் புது இன்பம் அடைந்து
அவள் ராகங்களை சுமக்கும் காதலித்து பார்
உன் உள்ளமும் காதல் சுகம் அடைந்தாள் நீ வெறுப்பு கொண்டவர்கள் மீதும் காதல் கொள்வாய்
காதலித்து பார்
இந்த உலகமும் அழகாக தோன்றும்!
No comments:
Post a Comment