யாழ்ப்பாணத்தார் சாதனை



Image result for "அன்னியனே வெளியேறு''

வெள்ளைக்காரன் பிடித்து  ஆண்ட நாடுகளிலெல்லாம் "அன்னியனே வெளியேறு'' என்ற கோஷம் மேலோங்கி இருந்த காலம்..ஆனால் யாழ்ப்பாணத்தார் என்ன செய்துகொண்டிருந்தார்கள்  என்பதற்கு இது ஒரு உதாரணம்.

                 1915ஆம் ஆண்டு.... 
முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலத்தில் எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது.

 ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

 மறுபடியும் போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது.

 இந்நிலையில் தான் காலனித்துவ நாடுகளுக்கு இச்செய்தி அனுப்பியதாம்.

 அன்றய காலத்தில் மலேசியாவை நிர்வகித்து வந்தவர் முனைவர்-அல்மா பேக்கர். பண வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்த அவர் தனது வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார்.

 அவை தான் போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம்.

 அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் தான் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

 உடனே நமது யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார்.இவருக்கு இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது.

 மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து உயர் ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார். ஆஹா!எம்மாட்டு சாதனை.

          ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆட்சியை   முற்று முழுதாக ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ்   விசுவாசமாக ஆங்கில அறிவுடன் பணியாற்றுவதில் யாழ்ப்பாணத் தமிழாகள் தான் முழுஆசியாவிலும் மேலோங்கி இருந்தார்கள்அவர்கள்  பொதுவேலைப்பகுதி,புகையிரதப்பகுதி,நிலஅளவைப் பகுதி,கட்டிடப் பகுதி,ஆகிய பகுதிகளின் மேலதிகாரிகளாகவும்,தமிழ் நாட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட தமிழ்த் தோட்டத்  தொழிலாளருக்கும் மேலதிகாரிகளாகவும்தொழில்பட்டனர்.தாம் படித்தவர் என்றாலே ஒரு கர்வத்துடன் நடந்துகொள்ளும் சுபாவம் கொண்ட யாழ்ப்பாணத்து இவ் அதிகாரிகள்,வெள்ளைக்காரத் துரைமாரைவிட  தாம் விசுவாசத்திலும் அதிகாரத்திலும்  சிறந்தவர்கள் என்று -அத் தமிழ்த் தொழிலாளர்களிடம் அதிக வேலை வாங்குவதன் மூலம்   -காட்டிக் கொண்டனர்.

               அக்காலத்தில் தென் இந்தியாவின் நாகப்பட்டினம், இலங்கையில் கொழும்பு போன்ற துறைமுகத்திலிருந்துதான் சிங்கப்பூர்,மலேசியா  போன்ற நாடுகளுக்கு கப்பல் சேவை நடைபெறும்.யாழ்ப்பாணத்தாருக்கு நாகப் பட்டின வழி சுலபமாகவும் கட்டணம் மிக மலிவானதுமாக இருந்தும் கூட அவர்கள் தோட்டத் தொழிலாளருடன் சேர்ந்து பயணித்தல் கௌரவக் குறைவாக க்கருதி கொழும்பு வழியாகவே தமது விடுமுறை காலங்களில் வந்து செல்வர்.

   அக்காலத்தில் இலங்கையின் சுதந்திரத்திற்கான எந்தவிதமான செயற்பாடுகளும் அற்றவர்களாக காணப்பட்ட இவர்கள் மாறாக இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக பிரச் சாரங்களை   தமிழ்நாடு,மலேசிய,இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்டுவந்தனர்.அவ்வேளையில் இந்தியர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டோரும் உண்டு.i

அன்னியர் காலத்தில் அவர்களுக்கு அனுசரணையாக வாழ்ந்த யாழோர் தொழிலில் மேல் நிலைக்குச் சென்றனர். அன்னியரின் விலகலினால் கிடைத்த   நாட்டின் விடுதலையின்போது இலங்கையின் பாதுகாப்பு பிரிவிலிருந்துஅனைத்துதிணைக்களத்திலும்தமிழரேபெரும்பான்மையராகவும், திணைக்களத்தின் அதிபர்களாகவும் இருந்தனர். வெள்ளைக் காரனிடம் அதி விசுவாசம் கொண்ட படித்தவர்கள் சிலர் அவர்கள் செல்லும்போது அவர்களின் கப்பல்களிலேயே ஏறிச் சென்றனர். இன்னும் சில படித்தவர்கள் அரசியலில் குதித்தனர். அப்படிக் குதித்த படித்த அரசியல் வாதிகளினால் இலங்கை கண்ட பின்னடைவினை இன்னொரு  தீபம் இதழில் அலசுவோம்.

 மேற்படி படித்த அரசியல் வாதிகளினால் ஊதப்பட்டு உருவெடுத்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையை  விட்டு வெளியேறி அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்த  பல லட்சக் கணக்கான  தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தவரேயாகும்.இவர்கள் வளர்ந்து நிற்கும் அந்நிய நாடெங்கிலும் பரவிவாழ்ந்தாலும், விட்டுக்கொடுப்புஇன்மை, சாதிவெறி, படித்தவர், படியாதவர்என்றவேறுபாடு,,பொறாமை,பழிவாங்கல்,துவேசம்,சீதனக்கொடுமை,தவறான பார்வை,அதிகாரத்தனம்,எனப்பல வகைப்பட்ட தன்மைககளை எம்மவர்களில் மட்டும் யாழ்ப்பாணத்தார் காட்டும் மனபாங்கு பல வருடங்களாக அவர்கள் இந் நாடுகளில் வாழ்ந்திருந்தும் அவர்களிடம் மாறியதாகத் தெரிவில்லை.

………….கே.மாதவன்

3 comments:

  1. http://youtu.be/HiQI7tgwZoo

    ReplyDelete
  2. அந்தநாள் ஞாபகம்......

    ReplyDelete
  3. அன்னியனே வெளியேறு என்ற கோஷத்தின் மத்தியில் என்னொரு துரோகி :இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் - உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார்.
    ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப் பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு தெரிவு செய்யப்பட்டு 1941ம்.ஆண்டு இலண்டனுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் பெயர் சி. கே. பதி என மாற்றப்பட்டது. மேலாதிகப் படிப்பிற்காக ஒரே ஒரு தமிழராக கனடாவிற்கு அனுப்பப்பட்டார். படிப்பு முடிந்தபின் மறுபடியும் இலண்டன் வந்து பின்னர் யுத்தத்தில் பணி புரிந்தபோது மிகவும் கடினமான விமானங்களை ஒட்டி, சாதனை புரிந்தார். ஒரு சமயம்nபிரான்ஸ் கடற்கரை ஓரமாக ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்து சாதனை படைத்தார். 1944ம் ஆண்டு போர் பதக்கம் கிடைக்கப் பெற்று கௌரவிக்கப்ப்ட்டார் போர் முடிவிற்கு வந்த பின்பு இங்கிலாந்தில் கடல் பிராந்திய காவல் துறையில் சில காலம் பணி புரிந்து விட்டு தாயகமான இலங்கைக்குத் திரும்பினார். இங்கு இந்திய விமான சேவையில் காப்டனாக 27 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வு பெற்றபின்பு சில காலம் இலங்கை விமானத் துறையில் பணியாற்றிவிட்டு திருகோணமலையில் உள்ள நிலாவெளியில் ஒரு விடுதியை ஆரம்பித்து நடத்திவருகிறார். இது போல பல தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அன்று முதல் இன்று வரை வெளிநாடுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து, பல்வேறு விசேட பதவிகளை புரிந்து, பேரோடும் புகழோடும் இலை மறை காய்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இனம் கண்டு, பழைய பதிவுகளை ஆராய்ந்து, தற்போதுள்ளோரை கண்டுபிடித்து ஆவணப் படுத்த வேண்டிய கடமை எங்கள் தலைமுறைக்கு உண்டு!--என இன்னொரு துரோகி உருகுகிறார்

    ReplyDelete