உன் வரவு இன்றி என்னை
வெறுமை ஆட்கொள்ளுமோ!.
உன் காதல் காணமால் போனால்
என் இதயமும் துடிக்குமோ!
என் நிகழ்காலத்திலே
பாலைவனம் குடி கொள்ளுமோ! ..
நீ என் மீதும் நான் உன் மீதும்
பொழிந்த அன்பு தூறல்கள்
துடிப்பு இன்றி போய்
எங்கள் காதலும்
அர்த்தம் இன்றி ப்போகுமோ!
நீ வருவாய் என உனக்காக
காத்து இருந்த நிமிடங்களும்
என் காதலை தேடி
நீ திரிந்த தருணங்களும்
காதல் மீது இருந்த ஏக்கமும்
பொய்யாகி போகுமோ!
அகிலன்,தமிழன்.
No comments:
Post a Comment