மொட்டாக இருந்து தன் புன்னகையை விரித்து
வாசத்தை தூது அனுப்பி காதல் செய்ய வைக்கும் மலரே
ஏன்? இத்தனை காலம் மௌனம் கொண்டு இருந்தாய்
செயற்கை தரும் அழகை விட
எனக்கு நீ தரும் அழகே நிஜம்
அதனாலே நித்தமும்
உன்னை பார்க்க துடிக்கிறேன்
கவிதையிலும் உன்னை கோர்த்து ரசிக்கிறேன்
வாசத்தை தூது விடும் மலரே
நீ சிந்தும் வாசத்தை போலவே
என் மனமும் பாசத்தை சிந்தி
உன் மேல் காதல் செய்ய துடிக்கிறது
மலரே நீ தரும் அழகு
கண்களுக்கு எல்லாம் விருந்தாகும்
நீ வாசத்தை தூது விடுவதாலேயே
தேனீக்களும் சண்டை போடுகின்றன
உன்னை முத்தமிட
மலரே நீ வாசத்தை தூது விடாதே
தூது விட்டு ஏக்கத்தை தூண்டாதே
வாசம் உன்னிடத்தில் தான் பிறப்பெடுக்கும்
அதைக்கொண்டு என்னை சிறைப்பிடிக்காதே!!
No comments:
Post a Comment