விலை வாசி...[காலையடி அகிலன்]

Image result for வறண்டு
விலை வாசி மெல்ல மெல்ல உயர 
அன்றாடம் உழைத்து வாழும் மக்களின்
 வாழ்வும் கேள்விக்குறி ஆகுமோ 
மக்கள் குறை  தீர்க்கச் சிந்தனை இன்றி 
அவர்களின் வளத்தைச் சுரண்டி தங்கள் 
பரம்பரையை வளர்க்கும் நிலைதான் மாறுமோ?

ஏழையின் உழைப்பில் 
வளருது நாட்டின் வளம் 
அவன் உழைக்கவில்லை எனின் 
நாடுதான் வளம் பெறுமோ ?

    இயற்கை    மீது   காதல் இன்றி போனதால் 
கரு மேகங்களும் சினம்      கொள்ள  
 பூமாதேவியும் வறண்டு போகிறாள் 
இவள் நிலையைக் கண்ணெடுத்துப்
 பார்க்க மனமின்றி இருப்பதனால்
இவள் தோழன் விவசாயி 
 எங்ஙனம்  தன் உணவைத்  தேடுவான்

முயன்றால் தான் இலக்கை அடையலாம் 
முயற்சி இன்றி போனால் 
எங்ஙனம் தான் விலைவாசி குறையும்

வசதி படைத்தவனுக்கு
 விலை வாசி ஒரு பொருட்டல்ல 
ஆணி வேர் இல்லாத மரங்களைப் போல 
வசதி குறைந்த மக்களின் வாழ்வு 
விலை வாசி உயர்வதால் 
தினமும் ஊஞ்சல் ஆடுகிறது
                                                       

0 comments:

Post a Comment