[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]
superstitious beliefs of tamils:
"பெண்கள்"
பெண் பிள்ளை பிறப்பு /Birth of a Daughter:
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே,......"[அகநானூறு 12,]
எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும்(இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி,ஏடி! இளைய மகளே!,நின் சிறிய அடி சிவப்புற என் செயச் சொல்கின்றாய் என்று கூறும்-இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது.
ஆனால் வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம்.பெண் பிறந்துவிட்டால் கவலை.ஏக்கப் பெருமூச்சு.இதுதான் இன்றுள்ள நிலை.இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது?தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன்,சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது.குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது.குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள்.தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.ஆனால் ஆரியர் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள்.அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக[அஸ்தமனமாக] இருந்தது எனலாம்.
தாய்வழி மரபு,திராவிடர்களின் அல்லது ஆரியர் அல்லாதவர்களின் சிறப்பியல்பாக/விசேஷ அம்சமாக முன்பு இருந்தது.அது இன்னும் நடைமுறை வழக்காக சில தெற்கு இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. திராவிடர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள்.இதனால் தான் இன்னும் கிராமிய/நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள்.இது சங்க பாடல்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது.பண்டைய தமிழர்களுக்கு மகள்/பெண் தொல்லையாக இருக்கவில்லை . ஆணின் உயிராதாரமான,இன்றியமையாத பாதியாகவே பெண் கருதப்பட்டது . எப்படியாயினும்,சங்க காலத்திற்கு பின் இந்த நிலை,ஆரியர் கொண்டுவந்த பல மூட நம்பிக்கைகளாலும் கோட்பாடுகளாலும்,மெல்ல மெல்ல சாய/சரிய தொடங்கியது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக்கூடியதாக உள்ளது.
பெண் பிள்ளை/மகள்,பிறக்கும் வரிசைமுறையில்,ஒற்றை எண்ணில் பிறந்தால் நல்லது என்ற நம்பிக்கை உண்டு.அதாவது முதலாவது,மூன்றாவது,ஐந்தாவது,இப்படி பிறந்தால் சிறப்பு என்பார்கள்.நாலாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டை பாழாக்கும் என்பார்கள் . அது போல ஐந்தாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டிற்கு தங்கம் கொண்டு வரும் என்பார்கள்.ஆனால் ஐந்தாவது ஆண் பிள்ளையோ ஊதாரியாய் எல்லா செல்வத்தையும் அழித்திடுவான் என்பார்கள்.ஆறாவது பெண் பிள்ளையோ செழிப்பை அல்லது வறுமையை கொண்டுவரும் என்பார்கள்.எட்டாவது பெண் பிள்ளையோ எல்லாவற்றையும் அழித்து விடும் என்பார்கள்."எட்டாவது பெண் எட்டி பார்த்த இடம் குட்டிச்சுவரு" என பழ மொழியும் கூறிச் சென்றுள்ளார்கள்.
மேலும் ஒரு குழந்தை நண்பகலோ நள்ளிரவோ பிறக்கக் கூடாது.அது மட்டும் அல்ல சித்திரை நட்சத்திரத்துடனும் பிறக்கக் கூடாது.ஏன் என்றால் யமனின் நன்றி உள்ள ஏவலர்,"சித்திர குப்தன்" பிறந்த நட்சத்திரம் அது.இப்படி பல பல எமது வாழ்வில் வந்து சேர்ந்து விட்டன.
"பல் போனால் சொல் போகும்"
குழந்தையின் முதல் பல் விழும் போது,அதை கவனமாக செழுமை அல்லது வளத்திற்கு இடுகுறியான சாணத்தில் வைத்து வீட்டு கூரையின் மேலாக எறிவார்கள்.அப்படி செய்வது விரைவாக பல் வளர வழி வகுக்கும் என்ற நம்பிக்கையால் ஆகும்.
மேலும் குழந்தைக்கு கண்ணாடி காட்டக் கூடாது என்பார்கள்.அது குழந்தையை ஊமை ஆக்கிவிடும் என்ற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருப்பதால்.
கல்யாணம்/Marriage
ஒருவரின் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முக்கிய சம்பவம் ஆகும்.இங்கும் பல மூட நம்பிக்கைகள் இணைந்து இருக்கின்றன புது மணப் பெண்,அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவருவாள் என நம்பப்படுகிறது.முதல் ஒரு வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை பொறுத்து மணப்பெண் மங்களகரமானவள் அல்லது அமங்கலமானவள் என கருதப்படுகிறது.என்றாலும் பொதுவாக புது மணப்பெண் மங்களகரமானவள் என்றே கருதப்படுகிறது.
இதற்கு முரண்பாடாக கைம்பெண்ணை[விதவையை] அமங்கலமானவள் என்றே குறிப்பாக கருதப்படுகிறது.இவர்களை எந்த நல் காரியங்களுக்கும் முன் நிற்க அனுமதிப்பதில்லை.அந்த காரியத்தின் வெற்றியை அது குறைக்கும் என்ற நம்பிக்கையாகும்.அது மட்டும் அல்ல பிள்ளை பெறாத மலடிகளை[barren woman ] தடை செயா விட்டாலும்,முடிந்தவரை தவிர்த்து கொள்கிறார்கள்.கல்யாணம் சம்பந்தமான நிகழ்வுகளில் சுமங்கலி பெண்களையே[married girl ] முன் நின்று நடத்த அனுமதிக்கிறார்கள்.பொதுவாக மணமக்கள் கிழக்கு நோக்கியே மணமேடையில் இருப்பார்கள்.
மேலும் திருமணம் பற்றிய கனவு நல்லதன்று என்றும்,இரண்டு திருமணங்கள் ஒரே வீட்டில் ஒரே இடத்தில் நடந்தால் ஒன்று சிறக்கும் மற்றது கெடும் என்றும்.மணமான பெண் மாப்பிள்ளை வீட்டில் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நடக்க வேண்டும் என்றும்.புது மணத் தம்பதியினர் புது வீட்டில் குடி ஏறக் கூடாது என்றும் கருதப்படுகிறது.அது போல காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது என்பார்கள்.
பகுதி/Part-11 B:"கர்ப்பிணி[புள்ளதாய்ச்சி]" அடுத்த வாரம்தொடரும்.
0 comments:
Post a Comment