காதல் இன்றி ........ இல்லை


காதல் இன்றி உயிர்களும் தோன்ற முடியுமா?
காதல் இன்றி வாழ்வதால் எந்த பயனும் இல்லையே!
இறந்த காலத்தின் காயங்களை மறைய செய்து
நிகழ் காலத்துக்கு உந்து சக்தி வழங்குவது காதலே!
பூமியில் உள்ள எல்லா உயிர்களிம் ஏங்குவது காதலுக்கே!
காதல் ஒரு ஊக்க சக்தி  இதை அதிகமாக விரும்பினால்
வாழ்க்கைக்கு அது  நஞ்சு மருந்தாய் மாறும்!
அளவோடு அருந்துபவர்களுக்கு  வாழ்க்கை அழகு ஆகும்!
வாழ்க்கைப் பாதையில் செல்வதற்கு தேவையாக இருப்பது காதல்!
பிரிவு என்னும் நோய் தொற்றும் போது புரிவதும் காதலே!
நினைவுகள் தேங்கி வைக்க உதவி புரிவதும் காதல்!
முடிவற்ற பயணமாக மனிதன் வாழ்க்கையில்  புதைந்து இருப்பது காதல்!
காதல் இன்றி எந்த உயிர்களும் இல்லை.

ஆக்கம்:அகிலன்,தமிழன்.

No comments:

Post a Comment