பாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், சில தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் சரித்திரகால கதையம்சம் கொண்ட  திரைப்படங்களை உருவாக்க முன்வந்துள்ளனர். அந்த வரிசையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் சங்கமித்ரா. இதில், நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்இப்படத்தின் துவக்க விழா பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் பட விழாவில் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையி இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் சி. “ நான் கடந்த 15 வருடங்களா எடுக்க நினைத்த படம் இது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் படம் ஒருவன் படத்தை பார்த்த போதே, இப்படி ஒரு படத்தை இயக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். இது பல வருட கனவு. படத்தின் பட்ஜெட், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.


சமீபத்தில் வெளியான பாகுபலி படம் தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது. ஆனால், சங்கமித்ரா படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவை பற்றி பேச வைக்கும். என் திரை வாழ்வில் சங்கமித்ரா ஒரு முக்கிய படமாக இருக்கும்என அவர் பேசினார்.
                                          

No comments:

Post a Comment