வாழ்வை,கலை தொடும் பொழுது

[When Life touches by Art]

கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே
கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! 
வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே
வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!

வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய்,மகளே
வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று!
இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே
"இயல் இசை நடனம்",ஒரு புது தெம்பு கொடுக்கிறது!
  
சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே
கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் !
வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல,மகளே
வாழ்வு எட்டி உதைக்கையில்,எமக்கு கைகொடுப்பது கலை! 

துன்பமும் துயரமும் எம்மை பீடிக்கும் பொழுது, மகளே
கலையின் நாலு சுவருக்குள், நாம் தஞ்சம் அடையலாம்!
கடுமையான அன்பில்லா வாழ்வு சூழும் பொழுது, மகளே
கலை பல கோணங்களில் தழுவி,ஆறுதல் அளிக்கிறது!


Art and life have many dimension,Dear daughter
Deeper we look,We find many perception!
When we feel real life touching the heart,Dear daughter
We see real life being mirrored by art!

You feel a change where art touches real life ,Dear daughter
At stages,helping to bring joy to human strife!
When you're being monotonous and tedious,Dear daughter 
"Literature,Music and dance", help to bring new perspectives!

When real life appears callous and cruel,Dear daughter
We might escape its cruelty,with some form of art!
Real life never follows a predictable or straight line,Dear daughter
Where life's agonies upset us,art shows a hopeful sign!

When some tragedy and despair befalls,Dear daughter
We can get security and shelter within art's four walls!
Where real life seem so harsh and cold,Dear daughter  
Art embrace and hold us with its dimensions!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/Kandiah Thillaivinayagalingam]

0 comments:

Post a Comment